Realme தனது புதிய ஸ்மார்ட்போனான Realme Narzo 50 -ஐ கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், அப்போது விற்பனைக்கு வராத இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனை, அமேசானில் வெறும் 249 ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme Narzo 50 தள்ளுபடி


Realme Narzo 50 ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ரூ.15,999 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அமேசான் தளத்தில் இன்று முதல் ரூ.3,000 தள்ளுபடி விலையில் 12,999 ரூபாய் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. HDFC வங்கி மில்லினியா கிரெடிட் கார்டு அல்லது HSBC கேஷ்பேக் கார்டை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% அதாவது 650 ரூபாய் கூடுதலாக தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் ஸ்மார்ட்போனின் விலை 12,349 ரூபாயாக இருக்கும். 


மேலும் படிக்க | ’கார் வாங்க சரியான நேரம்’ இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் மாருதி கார்கள்..!


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் 


கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் தள்ளுபடி விலைகளுடன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் சேர்த்தால், ஏற்கனவே கூறியதுபோல் Realme Narzo 50 ஸ்மார்ட்போனை 249 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். அதாவது, உங்களின் பழைய ஸ்மார்ட்போனுக்கு அதிகபட்சம் 12,100 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி உங்களுக்கு கிடைத்தால், Realme Narzo 50 ஸ்மார்ட்போனை 249 ரூபாய்க்கு வாங்க முடியும். அதாவது 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. 


மேலும் படிக்க | 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் புதிய OnePlus!


Realme Narzo 50 அம்சங்கள்


Realme Narzo 50 ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். MediaTek Helio G96 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைப் பெற்றிருக்கும். 120Hz புதுப்பிப்பு (Refresh) வீதம் மற்றும் 5,000mAh பேட்டரியுடன், 50MP முதன்மை சென்சார் கேமரா, 16MP செல்பி கேமராவும் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR