ஒன்பிளஸ் நிறுவனம் 2022-ல் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒன்ப்ளஸ் ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்ப்ளஸ் 10 ப்ரோவை அறிமுகப்படுத்தப் போவதாக கூறிய நிலையில், 2022-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒன்ப்ளஸ் நார்ட் 3ன் வெளியீடும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Amazon Fab Phone Fest: வெறும் 20 ஆயிரத்துக்கு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்
இந்த ஒன்ப்ளஸ் நார்ட் போன் 150W வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஒப்போவின் 150W சூப்பர் விஓஓசி தொழில்நுட்பத்தை ஒன்ப்ளஸ் பயன்படுத்தும் என்றும், இந்த ஆண்டுக்குள் 150W தொழில்நுட்பத்துடன் உருவான போன்களை வெளியிடும் என்று கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஆனது 150W அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்று ரியல்மி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போனின் பேட்டரியை 15 நிமிடத்தில் 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றமுடியும்.
ரியல்மீ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரண்டு போன்களும் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5ஜியை கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் இந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அந்த மாடல்கள் ஒன்ப்ளஸ் 10 மற்றும் ஒன்ப்ளஸ் 10ஆர் ஸ்மார்ட்போன்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஒன்ப்ளஸ் 10ஆர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறுகிறது.
தற்போது, ஒன்பிளஸ் 10 ப்ரோ மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. ஒன்ப்ளஸ் 10 ப்ரோ ஆனது குவால்கமின், அதிகபட்ச சினாப்டிராகன் 8 ஜென் 1 செயலியை கொண்ட சிறந்த போனாக உள்ளது. இவை தற்போது சீனாவில் மட்டும் தான் விற்பனைக்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க | Flipkart Big Bachat Dhamal விற்பனை நாளை; எக்கசக்க தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR