வெறும் 107 ரூபாய்க்கு ரீசார்ஜ்...40 நாட்கள் வேலிடிட்டி..அசத்தும் பிஎஸ்என்எல்
BSNL Offer: இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அல்ல, முழு 40 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள், அதனால்தான் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை மிகவும் விரும்புகின்றனர்.
ஜியோ மலிவான ரீசார்ஜ் திட்டம்: ஜியோ, விஐ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு அவ்வப்போது சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றனர். ஆனால் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டை மனதில் வைத்து ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அத்தகைய ரீசார்ஜ் திட்டங்களைவழங்குகின்றனர். நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலை சில நேரங்களில் சற்று அதிகமாக இருக்கும், இத்தகைய சூழ்நிலையில், இன்று உங்களுக்காக பிஎஸ்என்எல் இன் சக்திவாய்ந்த ரீசார்ஜ் திட்டத்தை பற்றி கூற உள்ளோம், இது கம்மி விலை மட்டுமல்ல, அதன் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றி அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 107 ஆக இருக்கும். மேலும் இந்த திட்டத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் ரீசார்ஜ் செய்த பிறகு, மொத்த வேலிடிட்டி 40 நாட்களுக்கு பெறுவீர்கள். அத்துடன் 40 நாட்களுக்கு BSNL ட்யூன்ஸ் வசதியையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் அழைப்பதற்கு 200 நிமிடங்கள் பெறுகிறீர்கள். BSNL இன் இந்த திட்டத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் ரீசார்ஜ் செய்த பிறகு, நீங்கள் இணையத்தையும் அனுபவிக்க முடியும்.
மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் இத்தனை சிறப்பம்சங்களா? அசத்தும் Fire Boltt ஸ்மார்ட்வாட்ச்!
மறுபுறம் இன்டர்நெட் சேவை பற்றி பேசுகையில், இந்த திட்டதில் மொத்தம் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தில், தினசரி டேட்டா வரம்பின் பலனை நீங்கள் பெறவில்லை. திட்டத்தில் கிடைக்கும் 3 ஜிபி இணைய டேட்டாவின் வேலிடிட்டி மொத்தம் 40 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீசார்ஜ் எப்படி செய்வது
பிஎஸ்என்எல்: https://portal2.bsnl.in/myportal/quickrecharge.do . அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. Paytm, PhonePe, Google Pay அல்லது வேறு ஏதேனும் BHIM போன்றா UPI apps மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை அல்லது வலைதளம் மூலமாக ரீசார்ஜ் செய்வது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால் அருகில் உள்ள வங்கி ஏடிஎம்’முக்கு சென்றும் ரீசார்ஜ் செய்யலாம்.
மேலும் படிக்க | Infinix: வெறும் ரூ.599-க்கு 5000mAh கொண்ட ஸ்மார்ட்போன்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ