செல்போன் கோபுரங்களில் பிரச்சனை காரணமாக சிக்னல் கிடைக்காமல் போகலாம் எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்செல் சேவையில் மீண்டும் டவர் சிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தென்னிந்திய சி.இ.ஓ. சங்கர நாரயணன் அறிவுறுத்தியுள்ளார். 


நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், கடந்த வாரம் புதன்கிழமை முடங்கியுள்ளதாக கூறி கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 


அதை தொடர்ந்து, ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் சரி செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.


இந்நிலையில், செல்போன் கோபுரங்களில் பிரச்னை காரணமாக சிக்னல் கிடைக்காமல் போகலாம் எனவே மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் சி.இ.ஓ. சங்கர நாரயணன் அறிவுறுத்தியுள்ளார்.