Reliance Jio-வின் இந்த அம்சத்தால், மொபைலில் நெட்வொர்க் இல்லாமலும் WiFi மூலம் கால் செய்யலாம்!!
சில சமயங்களில் முக்கியமான அழைப்புகளை நாம் செய்ய வேண்டிய நேரத்தில், நமது தொலைபேசியில் நெட்வொர்க் கிடைக்காமல் போய் விடுகிறது. இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஜியோ ஒரு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
புது தில்லி: பல முறை நமது தொலைபேசியில் நெட்வொர்க் பிரச்சனைகள் வருகின்றன. நெட்வொர்க் இல்லாத நேரங்களில் நாம் சில நேரம் அவசரமாக யாரையாவது அழைக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். இந்த சிக்கலை மனதில் வைத்து, தொலைத் தொடர்புத் துறையின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு வைஃபை அழைப்பு சேவையை (Jio WiFi Calling Service) வழங்கப் போகிறது. இதன் மூலம் தொலைத்தொடர்பு நெட்வொர்க் இல்லாமலும், வைஃபை உதவியுடன் எந்த வீடியோ மற்றும் குரல் அழைப்புகளையும் (Video and voice call) செய்யலாம். மேலும், இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
ஆம், சந்தாதாரர்கள் இந்த சேவைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. உங்களிடம் பிரீமியம் ஸ்மார்ட்போன் இருந்தால், சில செட்டிங்கை மாற்றி, வைஃபை உதவியுடன் ஃபோன் செய்யலாம். மற்ற மொபைல் நிறுவனங்களும் இந்த அம்சத்தை விரைவில் தொடங்கக்கூடும்.
WiFi காலிங் சர்வீஸ் என்றால் என்ன?
ஃபோனில் மொபைல் நெட்வொர்க் கிடைக்காதபோது, இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் நீங்கள் வைஃபை நெட்வொர்க் மூலம் அழைப்புகளை ஏற்கலாம், மற்றவர்களையும் அழைக்கலாம். வைஃபை நெட்வொர்க் வலுவாக இருந்தால், கால் ட்ராப்பிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த சேவையை ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் வைஃபை நெட்வொர்க்கில் ஜியோ வைஃபை காலிங் செய்யலாம்.
குரல் / வீடியோ அழைப்புகளுக்கு (voice/video calling) VoLTE மற்றும் Wi-Fi சேவைக்கு இடையில் மாறுவதற்கான வசதி இதில் உள்ளது. வாடிக்கையாளர்கள் வீடியோ வைஃபை அழைப்புகளையும் செய்ய முடியும். வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ALSO READ: பத்தே நிமிடங்களில் ‘Sold Out’: 3 Camera கொண்ட இந்த ஃபோனின் விலை 6,999 only!!
WiFi calling சேவைக்கு செட்டிங்கில் இதைச் செய்ய வேண்டும் -
இந்த அம்சம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே சப்போர்ட் செய்யயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தொலைதொடர்பு சேவை வழங்குநரின் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் தொலைபேசி பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் தொலைபேசி இந்த அம்சத்தை சப்போர்ட் செய்யுமெனில், இந்த வழியில் தேட வேண்டும். தொலைபேசியின் Settings-ல் இந்த அம்சத்தை நீங்கள் செக் செய்யலாம்.
Android ஸ்மார்ட்போன்களின் பயனர்கள் Settings-க்கு செல்ல வேண்டும். இங்கே Connections என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் WiFi Calling ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்த சேவை எனேபில் ஆகிவிடும், அதாவது இயக்கப்பட்டுவிடும்.
யார் இதைப் பயன்படுத்தலாம்
ஜியோ மூலம் 150 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. Apple iPhone 6s மற்றும் அதன் பின்னர் வந்த ஐபோன் மாடல்களைத் தவிர, முதன்மை சாம்சங் சாதனங்களான Samsung Galaxy Note 10, Galaxy S 10 ஆகியவற்றிலும் வைஃபை காலிங் செய்யலாம். இது தவிர, Samsung Galaxy M20, Galaxy A7, Redmi K20, Radmi K20 Pro மற்றும் Poco F1 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் செயல்படும்.
ALSO READ: 5,999 விலையில் Gionee Max அசத்தல் Smartphone.. விபரம் உள்ளே..!!