இந்த மாதம் மிகவும் மலிவான (Budget Phone) ஸ்மார்ட்போன் itel Vision 1 –னின் புதிய வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைபேசியின் விலை அதிகமாக இல்லாவிட்டாலும், பல சிறப்பு அம்சங்களுடன் இந்த தொலைபேசி வருகிறது. இந்நிறுவனம் தொலைபேசியின் புதிய வேரியண்ட்டை வெறும் ரூ .6,999 என நிர்ணயித்துள்ளது. இந்த தொலைபேசியின் முதல் விற்பனை ஆகஸ்ட் 18 அன்று இருந்தது. முதல் விற்பனையில் ஃபோனிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சில நிமிடங்களில் இந்த ஃபோன் முழுமையாக விற்கப்பட்டது.
Itel ட்விட்டரில் இது பற்றி தெரிவித்து, “பிளிப்கார்ட்டில் முதல் விற்பனையில் 10 நிமிடங்களுக்குள் #itelkavision 'விற்றுவிட்டது' என்று பகிர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். விஷன் 1 (3 ஜிபி) க்கு இவ்வளவு அன்பையும் ஆதரவையும் வழங்கியதற்கு நன்றி.” என்று எழுதியது.
We are thrilled to share that #IndiaKaVision was sold out in less than 10 minutes in its first-ever sale on Flipkart. Thank you for showing love and support for Vision 1 (3GB). pic.twitter.com/SUiEkrfNAF
— itel Mobile India (@itelMobileIndia) August 18, 2020
இந்த ஃபோனின் சிறப்பம்சங்களைப் பற்றி பேசினால், இதில் மிகவும் முக்கியமான விஷயம், இதன் 4000 mAh பேட்டரி மற்றும் அதன் தோற்றம்!! தொலைபேசியின் முழு விவரக்குறிப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
இந்த மலிவான தொலைபேசியில் 6.09 இன்ச் HD + IPS டிஸ்ப்ளே உள்ளது. இது 720x1560 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. தொலைபேசியின் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் வருகிறது. அதன் ஆஸ்பெக்ட் விகிதம் 19.5: 9 ஆகும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த தொலைபேசியில் ஆக்டா கோர் Unisoc SC9863A ப்ராசசர் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் தொலைபேசியின் மெமரியை 128 ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
ALSO READ: #MadeInIndia: இந்தியாவில் மீண்டும் களமிறங்க தயாராகும் மைக்ரோமேக்ஸ்...!
இந்த மலிவான தொலைபேசியில் மொத்தம் 3 கேமராக்கள் உள்ளன
கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த நுழைவு நிலை பிரிவு தொலைபேசியில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் LED flash உடன், 8 மெகாபிக்சல் முதன்மை மற்றும் 0.08 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. தொலைபேசியில் செல்ஃபி எடுக்க 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. அதாவது, இந்த மலிவான தொலைபேசியில் மொத்தம் 3 கேமராக்கள் கிடைக்கின்றன.
பவரைப் பொறுத்தவரை, 4000 mAh பேட்டரி ஐடெல் விஷன் 1 இல் வழங்கப்படுகிறது. இணைப்பிற்காக, தொலைபேசியில் 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, 3.5 மிமீ headphone jack-உடன் இன்னும் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த தொலைபேசியை கிரேடேஷன் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பச்சை நிறத்தில் வாங்கலாம். இந்த தொலைபேசியில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் (fingerprint sensor) உள்ளது. மேலும், இந்த மலிவான தொலைபேசி ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சத்தையும் கொண்டுள்ளது.
ALSO READ: இணைய உலகில் வியப்பூட்டும் சில websites... புகைப்பட பதிவிறக்கம் இலவசம்...