ஹாட்ஸ்டார் ஒரு ஆண்டு இலவசமாக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் ஒரு வருட சந்தா இலவசமாக வேண்டும் என்றால், ஜியோ அறிவித்திருக்கும் இந்த பிளானை நீங்கள் ரீச்சார்ஜ் செய்யதால் போதும்.
Reliance Jio free Disney + Hotstar Plan: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. ஜியோ பொறுத்த வரை பல ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டிருக்கிறது. அனைத்து திட்டங்களிலும் JioTV, JioSecurity, JioCinema, JioCloud போன்ற ஜியோ ஆப்ஸின் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. ஆனால் சிறப்பு திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ திட்டம் ரூ 1,066
ரிலையன்ஸ் ஜியோவின் 1,066 ரூபாய் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் 5 ஜிபி டேட்டா கூடுதலாகவும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தரவு முடிந்ததும், வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இந்த பிளானில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 173 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
மேலும், ஜியோவின் இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். இது தவிர, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் சந்தாவையும் நீங்கள் பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 பிளான்
ரூ.499 ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது மொத்தம் 56 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட தரவு தீர்ந்த பிறகு, வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud சந்தாவையும் பெறுவீர்கள்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 பிளான்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 56 நாட்கள். வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் மொத்தம் 112 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தினசரி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் அம்சமும் இருக்கிறது.
மேலே குறிப்பிட்டதுபோல இந்த ரீசார்ஜ் திட்டத்தில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். இது தவிர, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஜியோ பயன்பாடுகளையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ரிலையன்ஸ் ஜியோ திட்டம் ரூ.2,999
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2,999 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள். இந்த திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது, வாடிக்கையாளர்கள் மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். அன்லிமிட்டெட் அழைப்புடன் Disney + Hotstar மொபைல் சந்தா 1 வருடத்திற்கு இலவசம்.
இதுதவிர, 601 ரூபாய், 555 ரூபாய், 659 ரூபாய் ஆகிய திட்டங்களிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒருவருட சந்தாவை இலவசமாக ஜியோ கொடுக்கிறது. இவை அனைத்தும் ப்ரீப்பெய்ட் திட்டங்கள்.
மேலும் படிக்க | iPhone 13-ல் ரூ. 34,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் சேலில் அதிரடி சலுகை, முந்துங்கள்!!
மேலும் படிக்க | கடன் செயலிகளின் ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ