குறைந்த விலையில் விற்பனை - அசத்தும் ஜியோபுக் 4ஜி லேப்டாப்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் சிம் கார்டுகள், மொபைல்கள் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனம் தற்போது லேப்டாப்பையும் விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. அதன்படி,4ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஜியோபுக் லேப்டாப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஜியோபோன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 64 பிட், 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிபியு உடன் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் கூலிங் ஃபேன் எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் அதிகபட்ச மெமரி 128 ஜிபி ஆகும்.
இந்த லேப்டாப் 32 ஜிபி மெமரியுடனும் கிடைக்கிறது. இத்துடன் ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தழுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. புதிய ஜியோபுக் மாடலை பல்வேறு இந்திய மொழிகளில் இயக்க முடியும். இத்துடன் ஏராளமான ஜியோ செயலிகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 சேவைகள் இந்த லேப்டாப்பில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | ’மவுசு கண்ணா மவுசு’ 5ஜி வந்த பிறகும் டாப் கியரில் செல்லும் ஜியோவின் 4ஜி பிளான்
இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் ரூ. 15 ஆயிரத்து 799 எனும் விலையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பானது தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் சூப்பரான சாம்சங் போன்; தீபாவளி ஆஃபரில் மிக குறைந்த விலையில்
மேலும் படிக்க | Uber tips and tricks: தீபாவளி அன்று பயணம் செய்கிறீர்களா? - இதை நினைவில் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ