பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2 ஆம் தேதி வேகமான வேகத்தில் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு Jio 5G மற்றும் Airtel 5G சேவைகள் வெளியிடப்பட்டன. 5G மெதுவாக மக்களை நோக்கி சென்றடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜியோவின் 4ஜி திட்டம் ஒன்று, 5ஜி வந்தபிறகும் கூட அமோகமாக மக்களை கவர்ந்து வருகிறது. அந்த திட்டத்தை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம்.
ஜியோ 666 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ 666 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதில், பயனர்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதில் அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் செய்த பிறகு, மூன்று மாதங்களுக்கு வேறு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ஏர்டெல் திட்டமும் அதே விலையில் வருகிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | iPhone 13 Pro Max: இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, அசத்தும் பிளிப்கார்ட்
ஏர்டெல் ரூ.666 திட்டம்
ஏர்டெல்லின் 666 ரூபாய் திட்டத்தில், உங்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது.இந்தத் திட்டத்தில், அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பு, ஷா அகாடமியில் இலவச படிப்புகள், ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுக்கான சப்ஸ்கிரிப்சனையும் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | குறைந்தது ஸ்மார்ட்போன்களின் விலை... ஓப்போவின் அசத்தல் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ