சாம்சங்க் மாஸ் ஸ்கெட்ச்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் முன்னணி மொபைல் நிறுவனமான சாம்சங்க் அதிரடியான ஒரு வேலையை செய்துள்ளது. அதாவது நாடு முழுவதும் 5ஜி மொபைலுக்கான தேவை அதிகரித்திருப்பதால், அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி மொபைலை களமிறக்கி வருகின்றன. அதுவும் பட்ஜெட் விலையில் இருக்கும் 5ஜி மொபைலை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதனை புரிந்து கொண்ட சாம்சங்க் நிறுவனம், புதிய மொபைலை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்?, ஏற்கனவே இருக்கும் 5ஜி மாடல் போனின் விலையை குறைத்துவிடலாம் என திட்டமிட்டு, அதிரடி விலை குறைப்பு செய்துள்ளது. அதுவும் பட்ஜெட் விலையில் இருக்குமாறு குறைத்துள்ளது. 


மலிவான விலையில் சாம்சங்க் 5G மொபைல் 


சாம்சங்க் நிறுவனம் விலை குறைத்திருக்கும் மாடலின் பெயர் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G) மாடல். இரண்டு வகையான ஸ்டோரேஜ்ஜூகளுடன் வரும் இந்த மொபைல் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


மேலும் படிக்க | Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!!


விலைக்குறைப்பு விவரம் 


சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி என்ற இரு ஆப்சன்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியண்டுகளின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999. தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் மீதும் ரூ.2,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்புக்கு பிறகு சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.11,000 பட்ஜெட்டிற்கு வந்துள்ளது.


சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி மொபைல் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.11,999-க்கு விற்பனையாகிறது. 6ஜிபி ரேம் மொபைல் ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மிட்நைட் ப்ளூ, ஸ்டார்டஸ்ட் பிரவுன் மற்றும் அக்வா கிரீன் என மூன்று கலர் ஆப்ஷன்களில் மொபைல் கிடைக்கும். 


சாம்சங்க் கூடுதல் சலுகைகள்


சாம்சங் ஷாப் ஆப் (Samsung Shop App) வழியாக சாம்சங் கேலக்ஸி M13 5G ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 வரையிலான தள்ளுபடியை பெறுவார்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் எச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.1,000 என்கிற உடனடி கேஷ்பேக்கையும் (Cashback) பெறலாம்.


சாம்சங்க் மொபைல் விவரம் 


டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான சாம்சங்க் நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் 4 (One UI Core 4), ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ரியர் கேமரா செட்டப், 50MP மெயின் கேமரா + 2MP டெப்த் சென்சார், 5MP செல்பீ சென்சார், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 5000mAh பேட்டரி ஆகியவை இருக்கும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ