48MP கேமராவுடன் Samsung Galaxy M21 2021 Edition அறிமுகம்
Samsung Galaxy M21 2021 Edition ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போனின் சற்றே மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வருகிறது. இதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 (Samsung Galaxy M21 2021) எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் இல் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கும்.
ALSO READ | Bumper Discount: Samsung Galaxy F62 போனை சலுகை விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி இதில் உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா உள்ளது.
அத்துடன் இதில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 6000MAH பேட்டரி, வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களுடன் தேர்வு செய்ய இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.
இந்த புதிய தொலைபேசி ப்ரைம் டே விற்பனையின் ஒரு பகுதியாக ஜூலை 26 காலை 12 மணி முதல் அமேசான் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி வங்கி வழியாக 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர இது சாம்சங்.காம் மற்றும் நாட்டின் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | Samsung Galaxy F22: துவங்கியது விற்பனை, இந்த வழியில் 10% தள்ளுபடி பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR