சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது மற்றும் சமீப காலங்களில் போன்கள் குறித்து பல விவரங்கள் கசிந்து வருகின்றது. Samsung Galaxy S23 சீரிஸானது Qualcomm Snapdragon 8 Gen2 SoC இன் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பால் இயக்கப்படும் என்று பரப்பப்படுகிறது. Galaxy S23 இன் இந்திய வகைகளும் Exynos க்கு பதிலாக Qualcomm SoC உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக, Samsung Galaxy S23 சீரிஸ் தேதி, விவரக்குறிப்புகள், விலை மற்றும் வடிவமைப்பு விவரங்கள் முழுமையாக இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அமெரிக்க விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. வெரிசான் தரவுகளில் இருந்து புதிய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ்-க்கு பழைய விலையையே நிர்ணயம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் இதே நிலையை பின்பற்ற சாம்சங் முடிவு செய்திருக்கும் என தெரிகிறது.


மேலும் படிக்க | ஜியோ சிம்மை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்! ஏன் தெரியுமா?


இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் விலை
வெளியான தகவலின் படி, இந்தியாவில் Samsung Galaxy S23 விலை ரூ.79,999 இலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது Galaxy S22 தொடர் விலையை விட ரூ.7,000 அதிகமாகும். அதேபோல் Galaxy S23+ இன் விலை ரூ. 89,999 ஆக இருக்கலாம், அதே நேரத்தில் Galaxy S23 Ultra இன் விலை ரூ.1,14,999 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. உலகளவில், இந்த சீரிஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பிற்கு $799 (தோராயமாக ரூ. 65,000) இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy S23 Plus 8GB 256GB மாடலுக்கு $999 தோராயமாக ரூ.81,200 முதல் இருக்கலாம். இதில் சாம்சங் 8ஜிபி/512ஜிபி மாடலையும் வழங்கும். இறுதியாக, Samsung Galaxy S23 Ultra 8GB/256GB மாடலுக்கு $1,199 (தோராயமாக ரூ. 97,400) இலிருந்து தொடங்கலாம். இதற்கிடையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் பாண்டம் பிளாக், கிரீம், கிரீன் மற்றும் லாவெண்டர் வண்ணங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சாம்சங் கேலக்ஸி எஸ்23 வடிவமைப்பு
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட AMOLED இன்ஃபினிட்டி O ஃபிளாட் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் முன்புறம் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் முறையே 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2000 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Top 5 ChatGPT: 2023 ஆம் ஆண்டில் முதல் 5 சிறந்த ChatGPT குரோம் எக்ஸ்டன்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ