ஜியோ சிம்மை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்! ஏன் தெரியுமா?

ஏர்டெல் 1 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை சேர்த்துள்ளது, அதேசமயம் ஜியோ 2 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை இழந்துள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Jan 29, 2023, 01:03 PM IST
  • ஏர்டெல் 1 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.
  • ஜியோ 2 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது.
ஜியோ சிம்மை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்! ஏன் தெரியுமா?  title=

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ நவம்பர் 2022-ல் சுமார் 1.42 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை கவர்ந்தது.  ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த மாதத்தில் அதிகளவில் வயர்லெஸ் சந்தாதாரர்களைச் சேர்த்த நிலையில் பிஎஸ்என்எல் மற்றும் விஐ நிறுவனங்கள் தனது சந்தாதாரர்களை இழந்தது.  TRAI வெளியிட்ட தரவுகளின்படி, ஏர்டெல் 1 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை சேர்த்துள்ளது, அதேசமயம் ஜியோ 2 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை இழந்துள்ளது.  நாட்டின் பல பகுதிகளுக்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் ஏர்டெல்லை விட ஜியோ சற்று வேகமாக செயல்பட்டது.  

மேலும் படிக்க: iPhone 14: பிளிப்கார்ட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி!

மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கக்கூடிய திட்டங்களின் விலையை காட்டிலும் ஜியோ நிறுவனம் வழங்கும் திட்டங்களின் விலை குறைவாக இருக்கிறது.  அப்படி இருக்கையில் எப்படி ஜியோ நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது என்பது குழப்பமாக இருந்து வருகிறது.  வோடபோன் ஐடியா மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) முறையே சுமார் 2 மில்லியன் மற்றும் 0.5 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை இழந்திருக்கிறது.

jio postpaid plans

இந்தியாவில் ஜியோவின் 4ஜி நெட்வொர்க்குகள் எவ்வித கூடுதல் கட்டணங்களுமின்றி 5ஜி சேவையை அதன் பயனர்களுக்கு தாராளமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க வேண்டும் என்றால் 5ஜி எஸ்ஏ ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும்.  ரூ.239 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி வெல்கம் ஆஃபர் அழைப்பை மட்டும் வழங்குவதன் மூலம், குறைந்தபட்சம் ரூ.239 திட்டத்திற்கு பயனர்களை ஈர்க்க டெல்கோ முயற்சிக்கிறது.

மேலும் படிக்க | ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News