SAMSUNG Galaxy A73 5G: பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை தொடங்கிவிட்டது. இந்த விற்பனை பிப்ரவரி 9 முதல் தொடங்கி பிப்ரவரி 15 வரை இயங்கும். அதாவது காதலர் தினத்தில் பல மின்னணு சாதனங்களில் பேங் ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விற்பனையில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகள் வழகப்படுகிறது. பல ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும் பாதி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் சாம்சங் நிறுவனம் தனது வாட்டர் புரூப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி மிகவும் பிரபலமானது. மேலும் இந்த போனின் பெயர் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஆகும். அத்துடன் இந்த தொலைபேசியின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும், ஆனால் இந்த விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவாகக் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SAMSUNG Galaxy A73 5G சலுகைகள் & தள்ளுபடிகள்
SAMSUNG Galaxy A73 5G இன் அறிமுக விலை ரூ.47,490 ஆகும், ஆனால் பிளிப்கார்ட்டில் இந்த போனை ரூ.41,999க்கு வாங்கலாம். அதாவது இந்த போனில் ரூ.5491 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் இதில் உள்ளன, இதன் காரணமாக போனின் விலை இன்னுமும் குறையும்.


மேலும் படிக்க | Flipkart Sale: காதலர் தினத்தை ஒட்டி சாம்சங் போனில் கன்னாபின்னானு தள்ளுபடி, முந்துங்கள்!!


SAMSUNG Galaxy A73 5G வங்கி சலுகைகள்
SAMSUNG Galaxy A73 5G வாங்க HDFC வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.39,999 ஆக இருக்கும். 


SAMSUNG Galaxy A73 5G எக்ஸ்சேஞ்ச் சலுகை
Samsung Galaxy A73 5Gயில் ரூ.22,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டுமானால், இந்த சலுகையைப் பெறலாம். ஆனால் உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்து, லேட்டஸ்ட் மாடலாக இருந்தால் மட்டுமே ரூ.22,000 முழு ஆஃப் கிடைக்கும். அதன்படி இந்த போனின் விலை ரூ.17,999 ஆக ஆகும். 


SAMSUNG Galaxy A73 5G விவரக்குறிப்புகள்
Samsung A73 5G இன் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், நீங்கள் 6.7-இன்ச் FHD+ Super AMOLED+ Infinity-O டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைப் பெறுவீர்கள். கேலக்ஸி ஏ73 5ஜியில் குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். இந்த கேமரா அமைப்பில் 108MP முதன்மை சென்சார், 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5MP டெப்த் சென்சார் மற்றும் 5MP மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். Galaxy A73 5G ஆனது மிகப்பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ