இந்தியாவில் 3-in-1 Smart TV அறிமுகம்: பிளிப்கார்ட்டில் விலை வெறும் ரூ.6,999!!

Blaupunkt TV: ஸ்மார்ட் டிவி ரசிகர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்திய சந்தைகளில் 3 - இன் - 1 ஸ்மார்ட் டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2023, 01:32 PM IST
  • Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவி மிகவும் மெலிதான வடிவமைப்புடன் வருகிறது.
  • இதில் 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் கிடைக்கிறது.
  • சிக்மா ஸ்மார்ட் டிவி பீசி, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களையும் ஆதரிக்கிறது.
இந்தியாவில் 3-in-1 Smart TV அறிமுகம்: பிளிப்கார்ட்டில் விலை வெறும் ரூ.6,999!!  title=

அனைவரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருப்பது போல, நாட்டில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் டிவி-கள் உள்ளன. மக்கள் இப்போது முந்தைய சிம்பிள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு பதிலாக ஸ்மார்ட் டிவி-களையே வாங்க விரும்புகிறார்கள். ஸ்மார்ட் டிவி ரசிகர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தியும் வந்துள்ளது. இந்திய சந்தைகளில் 3 - இன் - 1 ஸ்மார்ட் டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி-யின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Blaupunkt 3-In-1 Sigma Smart TV 

Blaupunkt இன் சமீபத்திய தயாரிப்பு 3-In-1 Sigma Smart TV ஆகும். இதில் 24 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் HD ரெசல்யூஷன் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Blaupunkt Sigma 24 Inch HD 3-in-1 ஸ்மார்ட் டிவி: இந்தியாவில் இதன் விலை என்ன?

Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவியின் அதிகாரப்பூர்வ ஆரம்ப விலை ரூ.6,999 ஆகும். இந்த சிறப்பு தள்ளுபடி விலையானது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 வரை ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் லைவாக இருக்கும். இதன் அசல் சந்தை விலை ரூ.10,999 ஆகும்.

மேலும் படிக்க | OnePlus Cloud 11: வெளியானது OnePlus 11; விலை எவ்வளவு தெரியுமா?

 

Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவி: விவரக்குறிப்புகள்

Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவி பொழுதுபோக்குக்காகவும் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் அல்லது தொடர்களைப் பார்ப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி அதன் பிரீமியம் வரம்பின் ஒரு பகுதியாகும். மேலும் இது ஒரு ஒரு சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது HD டிஸ்ப்ளே, பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்ஸ் மூலம் 20W ஒலி வெளியீடு மற்றும் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்தை ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது உயர்தர சவுண்ட் மற்றும் உகந்த உள்ளடக்கத்தை வழங்குகிறது.

Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவி: மெலிதான தோற்றம்

Blaupunkt Sigma 24 Inch HD 3-In-1 ஸ்மார்ட் டிவி மிகவும் மெலிதான வடிவமைப்புடன் வருகிறது. இது A35 X4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. WiFi 2.4GHz ஆதரவு, 512MB ரேம் மற்றும் 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களும் இதில் கிடைக்கின்றன. இதில் 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் கிடைக்கிறது. சிக்மா ஸ்மார்ட் டிவி பீசி, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களையும் ஆதரிக்கிறது.

மேலும் படிக்க | 10 ஆயிரம் ரூபாய் போனை வெறும் 550 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி? முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News