பிரபல சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சீன நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் ஜியோனி தொலைபேசிகள் சம்பந்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து ஒரு சீன நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உலகம் முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சீனா (China) தீர்ப்பு ஆவண நெட்வொர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜியோனி (Gionee) தொலைபேசிகளில் செயல்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட கணினி தகவல் அமைப்புகளின் சட்டவிரோத கட்டுப்பாடு குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


வெளியீடு பகிர்ந்த தகவல்களின்படி, டிசம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019 க்கு இடையில் 20 மில்லியனுக்கும் அதிகமான ஜியோனி தொலைபேசிகளில் ஒரு செயலி மூலம் Trojan Horse மால்வேர்கள் வேண்டுமென்றே செலுத்தப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்த குறிப்பிட்ட செயலி, கோரப்படாத விளம்பரங்கள் மற்றும் பிற சட்டவிரோத வழிமுறைகள் மூலம் பயனர்களிடமிருந்து லாபம் ஈட்ட நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.


"Story Lock Screen” செயலியின் புதுப்பிப்பின் மூலம் ட்ரோஜன் ஹார்சை பயனர்களின் தொலைபேசிகளில் பொருத்துவதற்கு பெய்ஜிங் பைஸ், பிரதிவாதி ஷென்ஜென் ஷிபு தொழில்நுட்பத்துடன் (ஜியோனியின் துணை நிறுவனம்) இணைந்திருப்பதாக நீதிமன்றம் நம்பியது.


அறிக்கை விளக்குவது போல, புல் முறையைப் பயன்படுத்தி பயனரின் கவனத்திற்கு வராமலேயே இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட ஜியோனி மொபைல் போன்களில் தானாகவே புதுப்பிக்கப்படும்.


டிசம்பர் 2018 இல், தற்போதுள்ள "புல்" முறை திறனற்றது என்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு "ஸ்டோரி லாக் ஸ்கிரீன்" போன்ற செயலிகளில் (App) ஹாட் அப்டேட் செருகுநிரல் "டார்க் ஹார்ஸ் பிளாட்ஃபார்ம்" பொருத்த வாங் டெங்கேவால் முன்மொழியப்பட்டது என்று அறிக்கை மேலும் விளக்குகிறது. அதன் பிறகு ட்ரோஜன் செருகுநிரல்களுடன் செயலியும் அதன் SDK பதிப்பும் மேம்படுத்தப்பட்டன. மேலும் பயனரின் கவனத்திற்கு வராமல், "லிவிங் ட்ரோஜன் ஹார்ஸை" நிறுவவும் புதுப்பிக்கவும் "டார்க் ஹார்ஸ் பிளாட்ஃபார்ம்" பயன்படுத்தப்பட்டது.


ALSO READ: சத்தமில்லாமல் புதிய அம்சத்தை அறிமுகம் செய்த WhatsApp - முழு விவரம் இதோ!


தகவல்களின்படி, டிசம்பர் 2018 முதல் 2019 அக்டோபர் வரை, பெய்ஜிங் பைஸ் மற்றும் ஷென்சென் ஷிபு ஆகிய இரு தரப்பும் மொத்தம் 2.88 பில்லியன் முறை “புல் ஆக்டிவிடீசை” தொடர்ந்து மேற்கொண்டதாக நீதிமன்ற விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2019 முதல், மாதாந்திர "புல் ஆக்டிவிட்டி" மூலம் கவர் செய்யப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 21.75 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்று நம்பப்படுகிறது.


அவற்றில் 26,519,921 ஜியோனி மொபைல் போன்கள் அக்டோபர் 2019 இல் மட்டும் இதில் கவர் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்த "புல்லிங்" வணிகத்திலிருந்து RMB 27.85 மில்லியன் சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, சீன நீதிமன்றம், பிரதிவாதி ஷென்சென் ஷிபு தொழில்நுட்பம், கணினி தகவல் அமைப்பை சட்டவிரோதமாக கட்டுப்படுத்த முயன்றது என்று குற்றம் சாட்டியுள்ளது. க்சு லி, ஜு யிங், ஜியா ஜெங்கியாங் மற்றும் பான் குய் ஆகியோரும் கணினி தகவல் அமைப்பை சட்டவிரோதமாக கட்டுப்படுத்திய குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 200,000 யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: Vi-ன் REDX Family Plan: 150GB data, OTT இலவச சந்தா, இன்னும் பல சலுகைகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR