Shocking: 20 லட்சம் பேரின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்; அதிர்ச்சி
20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப் நிறுவனம்.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு நடந்து. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் புதிய விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப் (Whatsapp) பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் ஒன்று அளித்துள்ளது.
ALSO READ | புதிய கொள்கையை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்: Whatsapp
அதன்படி தவறுகள் நடக்கும் முன்பாக அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும் போது கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. எங்களின் குழு இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள் எங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மறுபுறம் தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. அத்துடன் தங்கள் குழு இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள், தங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ | WhatsApp மெஸ்சேஜ் அனுப்புகையில் எழுத்துருக்களை மாற்றுவது எப்படி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR