கிரெடிட் கார்டு பேலன்ஸை ஈஸியாக டிரான்ஸ்பர் செய்யலாம்! இதோ வழிமுறை
உங்களின் தற்போதைய கிரெடிட் கார்டு பேலன்ஸ், வட்டி விகிதங்களை மதிப்பீடு செய்யவும். இதில் இருந்து நீங்கள் எவ்ளோ தொகையை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்யுங்கள்.
மாத வருமானத்தை வைத்து செலவு செய்யும் காலம் மாறிவிட்டது. தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தி நமக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். இதனால் மக்கள் அளவிற்கு மீறி செலவு செய்து கூடுதல் பணம் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். அதேநேரத்தில் சரியாக பயன்படுத்தினால் எந்த நிதி சுழற்சிக்கு சிறப்பான ஆதாரமாக கிரெடிட் கார்டுகள் இருக்கும். அப்படியாக கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் (Credit Card Balance Transfer) மூலம் கடனை நிர்வகிப்பதற்கும் வட்டியை சேமிப்பதற்கும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு பேலன்ஸ் பரிமாற்றம்
இந்த செயல்முறையை தொடங்குவதற்கு முன்பு, உங்களின் தற்போதைய கிரெடிட் கார்டு பேலன்ஸ், வட்டி விகிதங்களை மதிப்பீடு செய்யவும். இதில் இருந்து நீங்கள் எவ்ளோ தொகையை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்யுங்கள். அடுத்ததாக, எந்த வங்கி கிரெடிட் கார்டு பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் குறைவான வருடாந்திர சதவீத விகிதம் (APR) கொண்டுள்ளதை தேர்ந்தெடுக்கவும். அத்துடன் கார்டின் காலாவதி காலம் மற்றும் பரிமாற்றக் கட்டணங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு பின்னர் புதிய கிரெடிட் கார்டிற்கு தரவுகளை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். பிறகு வங்கியில் இருந்து உங்களுடன் தொடர்பு கொண்டு, உங்களின் கடன் வரலாறு மற்றும் தரவுகள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்ப்பார்கள். அனைத்துமே சரியாக இருந்தால் வங்கியில் இருந்து உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும். அடுத்த படியாக, ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு மற்றும் ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டிய தொகை உள்ளிட்ட விவரங்களை செலுத்தி புதிய கிரெடிட் கார்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இறுதியாக, பணம் மாற்றம் வெற்றிகரமாக செயல்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியது: பணம் பரிவர்த்தனை முடிந்ததும் இரண்டு கிரெடிட் கார்டுகளையும் சரிபார்க்கவும். மாற்றப்பட்ட தொகையைச் செலுத்த 0 சதவீதம் ஏ.பி.ஆர் விகிதம் கழிக்கப்படும். இதனை தொடர்ந்து, கடன் தொகையை குறைக்க பணத்தை சரியாக செலுத்தி வரவும். முக்கியமாக புதிய கிரெடிட் கார்டை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | 56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ