கேமிங் பிரியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... தள்ளுபடியில் வெறித்தனமான மொபைல்களை வாங்கலாம்!

Gaming Smartphones On Discount: அமேசான் தள்ளுபடியில் iQOO ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன. தள்ளுபடியில் கிடைக்கும் மொபைலக்ளை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 11:15 AM IST
  • iQOO மொபைல்களை தற்போது மலிவான விலையில் வாங்கலாம்.
  • இவற்றில் பேட்டரி மற்றும் டிஸ்பிளே மிரட்டலாக இருக்கும்.
  • கேமராவும் நல்ல முறையில் வருகின்றன.
கேமிங் பிரியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... தள்ளுபடியில் வெறித்தனமான மொபைல்களை வாங்கலாம்! title=

Gaming Smartphones On Discount: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை கடந்த அக். 8ஆம் தேதி தொடங்கியது. பல பொருள்களில் ஆப்பர்கள் முழுமையாக முடிந்துவிட்டது என்றாலும்,  கேமிங் ஸ்மாட்ர்போனான iQOO மாடல்கள் தற்போது மலிவான விலையில் வாங்கலாம்.

தசாராவையொட்டிய இந்த பண்டிகைக் கால விற்பனையில், பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு நல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன. iQOO நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் (Gaming Smartphones) வலுவான பேட்டரி மற்றும் செயல்திறன் மற்றும் நல்ல கேமராக்களுடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், அமேசானில் தள்ளுபடி (Amazon Sale 2023) விலையில் கிடைக்கும் iQOO நிறுவனத்தின் கேமிங் ரக ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.

iQOO 11 5G

iQOO 11 5G மொபைல் என்பது இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. ஒன்று, 8GB RAM + 256GB மாடல், மற்றொன்று 16GB RAM + 256GB மாடல் ஆகும். இதன் அடிப்படை வேரியன்டின் விலை ரூ.49 ஆயிரத்து 999 ஆகும். எஸ்பிஐ கார்டில் இந்த போனை நீங்கள் வாங்கினால் ரூ.1,000 முழுமையான தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | வெறும் ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவாக சூப்பர் மொபைல்... கலக்கும் அம்சங்கள்!

போனில் உள்ள அம்சங்கள் என்றால், Qualcomm Snapdragon 8 Gen 2 பிராஸஸரைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh Rate) கொண்டுள்ளது. அல்ட்ரா கேமிங் பயன்முறை போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FuntouchOS 13 மூலம் செயல்படுகிறது. 

iQOO Z6 Lite 5G

iQOO Z6 Lite 5G மொபைலின் விலை ரூ.12,999 ஆகும். எஸ்பிஐ கார்டில் போனை வாங்கினால் ரூ.1,000 முழுமையான தள்ளுபடி கிடைக்கும். போனில் கிடைக்கும். இதன் முக்கிய அம்சங்களை பார்த்தால், Qualcomm Snapdragon 4 Gen 1 பிராஸஸரைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FuntouchOS 12 மூலம் செயல்படுகிறது.

iQOO 9 Pro 5G

iQOO 9 Pro 5G இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. அடிப்படை வேரியண்ட் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் 12GB RAM + 256GB என்ற மேம்பட்ட ஸ்ரோட்ஜ் வேரியண்டும் உள்ளது. இதன் அடிப்படை வேரியண்டின் விலை ரூ. 39,990 ஆகும். எஸ்பிஐ கார்டில் போனை வாங்கினால் ரூ.1,000 முழுமையான தள்ளுபடி கிடைக்கும். 

இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அம்சங்கள் என்றால், Qualcomm Snapdragon 8 Gen 1 பிராஸஸரைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த மொபைல் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh Rate) கொண்டுள்ளது. அல்ட்ரா கேமிங் பயன்முறை போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FuntouchOS 13 மூலம் செயல்படுகிறது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு பிடித்தவர்களுக்கு ஐபோன் கிப்ட் பண்ணுங்க... ஆப்பிளின் பண்டிகை கால சேல் தொடக்கம்!

iQOO Neo 7 5G

iQOO Neo 7 5G இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வருகிறது. இதில் அடிப்படை வேரியண்ட் 8GB RAM + 128GB மாடல் ஆகும். 12GB RAM + 256GB வேரியண்ட் மேம்பட்ட மாடல் ஆகும். இதன் அடிப்படை வேரியண்டின் விலை ரூ.27,999. எஸ்பிஐ கார்டில் போனை வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். 

இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8200 பிராஸஸரைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த மொபைல் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh Rate) கொண்டுள்ளது. அல்ட்ரா கேமிங் பயன்முறை போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FuntouchOS 13 மூலம் செயல்படுகிறது.

iQOO Neo 7 Pro 5G

iQOO Neo 7 Pro 5G இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வருகிறது. 8GB RAM + 128GB மற்றும் 12GB RAM + 512GB என இரண்டு மாடல்கள் கிடைக்கின்றன. இதன் அடிப்படை வேரியண்டின் விலை ரூ.32,999 ஆகும். எஸ்பிஐ கார்டில் போனை வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். 

இந்த மொபைலில் Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலியைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஃபோனில் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 10-பிட்கள் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அல்ட்ரா கேமிங் பயன்முறை போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FuntouchOS 13 இல் வேலை செய்கிறது.

மேலும் படிக்க | கொஞ்சம் இதையும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்..! தரமான கேமராவுடன் 20 ஆயிரத்தில் உள்ள ஸ்மார்ட்போன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News