How To Lock Sim Card: மொபைல் போன்களையும், மொபைல் செயலிகளையும் லாக் செய்வதை போல் உங்களின் சிம் கார்டுகளையும் பாஸ்வேர்ட் அதாவது பின்நம்பர்கள் கொடுத்து லாக் செய்துகொள்ளலாம். தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ அல்லது தொழில்முறை நோக்கங்களுக்காகவோ மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கு எங்கள் ஸ்மார்ட்போன்கள் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம் கார்டு நீண்ட காலமாக புழக்கத்தில் இருப்பதுதான். ஆனால் இதில் புதியது என்னவென்றால், நீங்கள் சிம்மை பின்நம்பர் மூலம் அதை லாக் செய்துகொள்ளலாம் என்பதுதான். சிம் பின் (SIM PIN) என்பது உங்கள் சிம் கார்டுக்கு மட்டுமே வேலை செய்யும் தனிப்பட்ட அடையாள எண்ணாகும். நீங்கள் சிம் பின்னை செயல்படுத்தியிருந்தால், பின்நம்பரை கொடுக்காமல் உங்கள் சிம் இயங்காது. 


உங்கள் ஃபோன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ சிம் கார்டை உங்களால் அங்கீகரிக்கப்படாத மொபைல்களில் போட்டு செய்லபடுத்துவதை இது தடுக்கும். இந்த அம்சத்தை நன்றாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிம் கார்டில் அதை செயல்படுத்த விரும்பினால், ஆண்ட்ராய்டு ஃபோன் மற்றும் ஐபோனில் சிம் கார்டை லாக் செய்வது எப்படி  என்பதை இதில் காணலாம்.


மேலும் படிக்க | பட்டையை கிளப்பும் Black Friday விற்பனைகள்... எந்தெந்த தளத்தில் எவ்வளவு தள்ளுபடி?


ஐபோனில் சிம் லாக் செய்வது எப்படி?


- முதலில் Settings சென்று அதில் மொபைல் டேட்டா மற்றும் சிம் பின் ஆப்ஷனுக்கு செல்லவும்.


- சிம் பின்னை முதல்முறையாக பயன்படுத்தி சிம் லாக் செய்தால், முதலில் Default பின்நம்பரை உள்ளிடவும். 


- Default பின்நம்பரை மாற்ற விரும்பினால், Change Pin ஆப்ஷனைக் கிளிக் செய்து, பழைய மற்றும் புதிய பின்களை உள்ளிடவும். மூன்று முறை தவறான சிம் பின்னை உள்ளிட்டால், உங்கள் சிம் கார்ட் பிளாக் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உங்கள் ஆப்பிள் ஐடி மற்றும் iCloud கணக்கை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, நீங்கள்  Two-factor Verification-ஐ பயன்படுத்தலாம். இது ஒரு பாதுகாப்பு அம்சமாகும், இது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய சாதனத்தில் உள்நுழையும்போது அல்லது முக்கியமான தகவலை அணுகும்போது பாஸ்வேர்ட் மற்றும் ஆறு இலக்கக் குறியீட்டை உள்ளிடும்படி கேட்கும். 


உங்கள் நம்பகமான சாதனங்கள் அல்லது மொபைல் எண்ணுக்கு குறியீடு அனுப்பப்படும், எனவே நீங்கள் மட்டுமே உங்கள் கணக்கை அணுக முடியும். இது ஹேக்கர்கள் உங்கள் கணக்கில் நுழைவதை கடினமாக்குகிறது.


ஆண்ட்ராய்ட் மொபைலில் சிம் லாக் செய்வது எப்படி?


- முதலில் Settings பகுதிக்கு சென்று , Security ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


- அதில் More Settings பகுதிக்கு சென்று Sim Card Lock ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


- Lock Sim Card ஆப்ஷனை ஆன் செய்யவும். முதல்முறையாக சிம்மை லாக் செய்தால் Default பின்நம்பரை உள்ளிடவும்.


- Default பின்நம்பரை மாற்ற, Change Sim Pin என்பதைக் கிளிக் செய்து, பழைய மற்றும் புதிய பின்களை உள்ளிடவும். மூன்று முறை தவறான சிம் பின்னை உள்ளிடுவது உங்கள் சிம் கார்டைத் தடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இ-சிம்


சிம் பாதுகாப்பிற்கு ஏர்டெல் நிறுவனம் புதிய வழிமுறையும் கொண்டுவந்துள்ளது. அதன் சிஇஓ கோபால் விட்டல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இ-சிம் முறையை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும் என சில நாள்கள் முன் கேட்டுக்கொண்டார். இதனால் ஒருவரது மொபைல் தொலைந்தாலும் சிம் கார்ட் அதில் இன்ஸ்டால் செய்தே இருக்கும் என்பதால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெறியரா நீங்கள்... இனி ஈஸியாக வீடியோக்களை டவுண்லோட் செய்யலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ