TechTips: ஸ்மார்ட்போன் கவரால் குறையும் சிக்னல் வேகம்
ஸ்மார்ட்போனின் கவரால் கூட உங்கள் போனில் சிக்னலின் வேகம் குறையுமாம்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று, சிக்னல் கட்டாவது. நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு மீண்டு வந்தால் கூட உங்களுடைய செல்போனில் மட்டும் சிக்னல் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் ஒரு ஸ்மார்டான டிரிக்கை கடைபிடித்து பாருங்கள். அது உங்களுக்கு வொர்க்அவுட் ஆகும்.
மேலும் படிக்க | ஜியோ மாஸ் திட்டங்கள்! ரூ.300-க்கு கீழ் இவ்வளவு திட்டங்கள்
ஃபோன் கவரில் இருக்கும் டிரிக்
இந்த விஷயம் உங்களுக்கு ஆச்சரியத்தைக்கூட ஏற்படுத்தலாம். ஆனால், அது உண்மையும் கூட. சிலர் போன் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தடிமனான பிளாஸ்டிக் கவர்களை போன் கவராக பயன்படுத்துகிறார்கள். இந்த தடிமனான கவர்கள் உங்கள் போனுக்கு கிடைக்கக்கூடிய சிக்னலை மட்டுப்படுத்துகிறது. இதனால், செல்போனுக்கு கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்காமல் இணைய வேகமும் தடைபடும். குறைவான வேகத்தில் இணையம், பயன்படுத்தும்போது கடுப்பாக உணர்வீர்கள்.
மற்றொரு டிரிக்
தடிமனான கவரை நீக்கிவிட்ட உங்களுக்கு, நெட்வொர்க் வேகம் அதிகமாக இருப்பதை உணர்வீர்கள். மற்றொரு டிரிக் என்னவென்றால், ஸ்மார்போனை மூடிய அறைகளுக்குள், அதாவது ஜன்னல் இல்லாத அறைகளில் பயன்படுத்தும்போது குறைவான நெட்வொர்க் வேகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால், முடிந்தவரை திறந்தவெளியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துங்கள். அறைக்குள் இருந்து கொண்டு நெட்வொர்க் கிடைக்கவில்லை என்று புலம்ப வேண்டாம். திறந்தவெளியில் போனை பயன்படுத்துங்கள். இருக்கும் இடத்தை விட்டு மாறும்போது சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR