கோடை மற்றும் மழைகாலம் ஓய்ந்திருக்கும் நிலையில் கேட்ஜெட் மழை பெய்யும் நேரம் தொடங்கியிருக்கிறது. புரியவில்லையா? அடுத்தடுத்து பல சூப்பரான ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட் பொருட்கள் இனி வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்தவையாக இருக்கும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்பிளஸ் நோர்டு 2T


இரண்டாம் தலைமுறை OnePlus Nord ஸ்மார்ட்போனின் 'T' சீரீஸ் தொடங்கிவிட்டது. இந்த OnePlus Nord 2T ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒன்பிளஸ் நிறுவனம் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12- ஐ அடிப்படையாகக் கொண்டது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படும். 50 MP பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ராவைட் மற்றும் 2 MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 4.500 mAH பேட்டரி மூலம் இயக்கப்படும். ரூ.30 ஆயிரத்துக்குள் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



மேலும் படிக்க | நம்ப முடியுதா? 7.99 லட்சத்தில் SUV கார். மாருதி சுசுகி நிறுவனம் அசத்தல் ரிலீஸ்


ஓப்போ ரெனோ8 புரோ


OPPO-வின் ரெனோ வரிசையில் சமீபத்தியது ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 சிப்செட்டில் இயங்கும் OPPO Reno8 Pro.  12o ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.62-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். ஃபோனில் மூன்று பின்புற கேமரா,  4,500 mAh பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையில் ColorOS-ல் இயங்கும். இதன் விலை ரூ. 35,000-க்குள் இருக்கலாம். அதிகாரப்பூர்வ வெளியீட்டு இல்லை என்றாலும் ஜூலையில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. 


கூகுள் பிக்சல் 6ஏ


மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்மார்ட்போன் Google Pixel 6A. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கூகுள் பிக்சல் போன்கள் இந்தியாவில் வர இருக்கின்றன. புதிய பிக்சல் ஃபோனில் டென்சர் சிப், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10_+ ஆதரவுடன் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 12.2 MP + 12 MP பின்புற கேமரா அமைப்பு மற்றும் 8 MP முன்பக்க கேமரா ஆகியவையும் இடம்பெறும். இந்த ஃபோன் கூகிளின் சொந்த ஆண்ட்ராய்டு 12-ல் இயங்கும். ஜூலையில் அறிமுகமாகலாம். அதிகபட்சம் ரூ.40 ஆயிரம் விலை இருக்க வாய்ப்புள்ளது. 



இந்த போன்களை தவிர நத்திங் மற்றும் சாம்சங்க் ஸ்மார்ட்போன்களும் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால், ஜூலையில் காத்திருந்து உங்களுக்கான சரியான மொபைலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | அவசர காலத்தில் உயிரைக் காக்கும் ஸ்மார்போன்! இதை செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR