வேகமாக சுழலும் உலகில் ஒருவருக்கு ஆபத்து காலத்தில் கிடைக்கும் உதவி என்பது அளப்பரியது. நெருங்கிய உறவினராகவே இருந்தாலும், அனைத்து நேரங்களிலும் அருகில் இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரத்தில், ஸ்மார்ட்டான உலகத்தில் ஸ்மார்ட்போன் எப்போது கூடவே இருக்கும். அந்த போன், உங்களை ஆபத்து காலத்தில் உதவி செய்யும் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்.
டெக்னாலஜியை கையில் வைத்திருக்கும் நாம், அதனை சரியாக பயன்படுத்துவது எப்படி? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்காக உதவி செய்பவர்களை அழைக்க, ஸ்மார்ட்போன் தயாராக இருக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்சுகளில் அவசர உதவிக்கு உடனடியாக உறவினர்களை அழைப்பதற்கான அம்சங்கள் இருக்கின்றன. இதேபோல் கூகுள் பிக்சலில் கார் விபத்தைக் கண்டறியும் அம்சம் உள்ளது.
மேலும் படிக்க | Used Cars: நம்ப முடியாத விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை, முந்துங்கள்
விபத்து ஏற்பட்டவுடன், உடனடியாக அவசர எண்ணுக்கு அழைப்பு செல்லும். இத்தகைய வசதிகள் ஆபத்தில் இருப்பவர் தொடர்பான தகவலை அறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய உதவி கிடைக்க வழி செய்கின்றன. கூகுள் பிக்சலின் அவசர அழைப்பு அம்சம் இன்னும் சில மேம்பாடுகள் செய்யப்படுள்ளன. புதிய பாதுகாப்பு அம்சங்கள் மூலம் ஆண்டிராய்டு போன்களுக்கும் இனி தகவல் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது அண்மையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கூகுள் பிக்சல் இருக்கும் மொபைல் போன்கள் மட்டுமே, ஆபத்து காலத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சத்தை பயன்படுத்தி வந்தநிலையில், இனி பிக்சல் அல்லாத ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களும் இந்த வசியை விரைவில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது கூகுள் பிக்சல்.
பிக்சல் அல்லாத ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்குச் செயல்பட சில அனுமதிகள் தேவைப்படுவதால், அந்த அம்சங்களை நிறுவனம் எப்படிச் சேர்க்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தனிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் Google Play சேவைகள் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் விபத்து கண்டறிதல் மற்றும் பிற புதிய பாதுகாப்பு அம்சங்களுக்கான அணுகலை ஆரம்பத்தில் பெறும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் தற்போது தெரியவில்லை.
மேலும் படிக்க | ஷாரூக்கான் பயன்படுத்தும் போன் இதுதான் - இத்தனை அம்சங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR