இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக, புதிய ஸ்மார்ட் ஒன்றை வெளியிட சோனி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி எக்ஸ்பெரியா எல்2 என்ற ஸ்மார்ட்போனை நேற்று அது வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் விலை ரூ.19.990 ஆகும். இதில் 13 எம்.பி பின்புற கேமரா, 8 எம்.பி முன்புற கேமரா உள்ளது. 3,300 எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட இந்த போனில், கைவிரல் ரேகை பதிவு செய்யும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 


இதில் மீடியாடெக் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எம்.டி.6737டி சிப்செட் மூலம் 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.


இதுமட்டுமின்றி 256 ஜி.பி கூடுதல் ஸ்டோரேஜ்-ம் இதனுடன் இணைக்க முடியும். ஆண்ட்ராய்ட் நாகட் தளத்தில் இது இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.