சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சாதனம் 690 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் (Sony Xperia 10 III Lite) FHD+ தீர்மானம் கொண்ட 6 அங்குல OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 21: 9 என்ற விகித விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது HDR ஐ ஆதரிக்கிறது.


ALSO READ | இந்த ஆண்டு SONY PlayStation VR இன் 6 சிறந்த புதிய கேம்களை அறிமுகப்படுத்தும்


சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சாஃப்ட்வேர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இது 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.


இந்த போனில் 12 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் அடங்கிய மூன்று கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக, வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட்போனில் 8MP முன் கேமராவைப் பெறுகிறார்.


சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் விலை பற்றி பேசுகையில் இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு அம்சமானது இந்திய மதிப்புப்படி ரூ.31,600 என்ற விலையில் இருக்கிறது. இது வைட், ப்ளூ, பிளாக் மற்றும் இளஞ்சிவப்பு வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானில் ரகுடென் மொபைல் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும். 


சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் சாதனமானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இரட்டை சிம்கார்ட் ஸ்லாட்களோடு ஆதரவு இருக்கிறது. மேலும் இதில் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.


ALSO READ | முந்துங்கள்: இந்தியாவில் களமிறங்கியது Sony Xperia L2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR