விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்ற அலெக்சி லியோனோவ் ரஷியாவில் இன்று காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனோவ் 18-3-1965 அன்று வோஸ்கோட் -2 விண்கலத்தை விட்டு வெளியேறி விண்வெளியில் 12 வினாடிகள் நடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றார் அலெக்சி.


விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக வியக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று சிறப்புக்குரிய சாதனையை ஏற்படுத்திய அலெக்சி லியோனோவ் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அலெக்சி லியோனோவ் தனது 85 வயதில் இன்று காலமானார் என அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.


மரணமடைந்த அலெக்சி லியோனோவ் ரஷிய ராணுவத்திலும் பின்னர் விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.