புதுடெல்லி: ஸ்வீடிஷ் மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான Spotify வியாழன் அன்று அதன் நிகழ்நேர பாடல் அம்சத்தை உலகளவில் வெளியிட்டது, இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா உட்பட 26 சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IOS மற்றும் Android சாதனங்கள், டெஸ்க்டாப் கணினி,, கேமிங் கன்சோல்கள் மற்றும் டிவியில் உள்ள அனைத்து இலவச மற்றும் பிரீமியம் பயனர்களுக்கும் Spotify இல் உள்ள பாடல்கள் தற்போது கிடைக்கின்றன. "Lyrics அம்சம், Playstation 4, Playstation 5, XBox One ஆகியவற்றில் ஆண்ட்ராய்டு டிவியுடன், FireTV, Samsung, Roku, LG, Sky மற்றும் Comcast உட்பட கிடைக்கும்" என்று  ஸ்பாடிஃபை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த பாடல் வரிகள் உலகெங்கிலும் உள்ள இசைப் பிரியர்கள் விரும்பிய  அம்சங்களில் ஒன்றாகும். "Musixmatch உடன் கூட்டுசேர்வதன் மூலம், எங்கள் விரிவான லைப்ரரி டிராக்குகள் முழுவதும் செயலியில் உள்ள அணுகல் மூலம் பாடல் வரிகளை உயிர்ப்பிக்கிறோம்" என்று Spotify தெரிவித்துள்ளது.


ALSO READ | ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி! ஆப்பிள் நிறுவனம் அறிவித்த அட்டகாசமான திட்டம்!


"8 மில்லியனுக்கும் அதிகமான" தலைப்புகளுக்கான பாடல் வரிகளை வழங்குவதாக மியூசிக்ஸ்மாட்ச் (Musixmatch) கூறுகிறது. பாடல் வரிகள் அம்சத்தைக் (Lyrics feature) கண்டறிய, ஒரு பாடலில் உள்ள Lyrics feature என்ற தெரிவை சொடுக்கினால் போதும்  


கேட்கும் போது, ​​திரையின் அடிப்பகுதியில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும். பாடல் ஒலிக்கும் போது நிகழ்நேரத்தில் பாடல் வரிகளையும் காண முடியும்.  


பாடல்களை பகிர, பாடல் வரிகள் திரையின் கீழே உள்ள "Share" என்ற பொத்தானைத் சொடுக்கவும். பின்னர் மூன்றாம் தரப்பு இயங்குதளங்கள் வழியாக நீங்கள் பகிர விரும்பும் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும். 
பாடல் வரிகள் அம்சத்துடன், Spotify அதன் "Behind the Lyrics" அம்சத்தை நிறுத்துவதாகக் கூறப்படுகிறது.


ALSO READ | எரிமலைகள் வெடித்து, பூமியின் 90 சதவீத உயிரினங்கள் அழிந்தன 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR