பம்பர் சலுகை! இந்த 4 SUV கார்களில் மெகா தள்ளுபடி, முந்துங்கள்
SUV வாங்கும் போது பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். நீங்கள் ஒரு SUV வாங்க நினைத்தால் இதுவே சரியான நேரம்.
புதுடெல்லி: 2021 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது, இதன் மூலம் கார் வாங்குவதில் மிகப்பெரிய தள்ளுபடிகள் நடக்கின்றன. டாடா (Tata) முதல் மஹிந்திரா (Mahindra) வரையிலும், ஹூண்டாய் (Hyundai) முதல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) வரையிலும் அனைத்து நிறுவனங்களும் கார்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. அதன்படி நீங்கள் புதிய எஸ்யூவி கார் வாங்க நினைத்தால், இதுவே சரியான வாய்ப்பு. சந்தையில் 4 எஸ்யூவிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் டஸ்டர் (Renault Duster)
ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) எஸ்யூவி அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவியை வாங்கினால் ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.30,000 வரை கார்ப்பரேட் சலுகைகள் கிடைக்கும். ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதில், முதல் இன்ஜின் 106hp மற்றும் இரண்டாவது இன்ஜின் 156hp ஆகும்.
ALSO READ:Most Beautiful Car: இந்தியாவில் இதன் விலை, பிற விவரங்கள் இதோ
நிசான் கிக்ஸ் (Nissan Kicks)
Nissan Kicks SUV காரை வாங்கினால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். நிசான் கிக்ஸ் எஸ்யூவியை வாங்கும் போது ரூ.70,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.10 ஆயிரம் வரை கார்ப்பரேட் சலுகைகள் வழங்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்தால், 5000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். நிசான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
மஹிந்திரா XUV300 (Mahindra XUV300)
மறுபுறம், மஹிந்திராவின் (Mahindra) XUV300 ஐ வாங்கினால், அதிகபட்சமாக ரூ.69 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். மஹிந்திரா XUV300ஐ வாங்கினால், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.30 ஆயிரம் வரை ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் சலுகைகள் கிடைக்கும்.
மஹிந்திரா KUV100 (Mahindra KUV100)
மஹிந்திரா KUV100ஐ வாங்கினால், ரூ.38 ஆயிரத்து 55 வரை பணத் தள்ளுபடியும், ரூ.20 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.3 ஆயிரம் வரை கார்ப்பரேட் ஆதாயமும் கிடைக்கும். மஹிந்திரா KUV100 ஆனது 83hp ஆற்றலை வழங்கும் 1.2L 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
ALSO READ: Honda SUV: முன்னணி கார்களுக்கு போட்டியாக சந்தையில் களம் இறங்கும் புதிய ஹோண்டா கார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR