ஹோண்டா கார்ஸ் இந்தியா விரைவில் ஒரு புதிய எஸ்யூவியை சந்தைகளில் அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. கைகிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோ 2021 இல் ஹோண்டா சிறந்த தோற்றம் கொண்ட SUV RS கான்செப்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு மிட்-சைஸ் கான்செப்ட் எஸ்.யு.வி (SUV) ஆக இருக்கும். இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்றவற்றுக்கு போட்டியாக களத்தில் இறங்கும். ஹோண்டா நிறுவனத்தின் வரிசையில் இந்த புதிய எஸ்.யு.வி, HR-Vக்கு கீழே இருக்கும்.
வரவிருக்கும் ஹோண்டா எஸ்யூவி, ஆர்எஸ் கான்செப்ட்டின் அடிப்படையிலான காம்பாக்ட் எஸ்யூவி ஆக இருக்கும். இதுவரையிலான மிகச்சிறிய ஹோண்டா எஸ்யூவியாக இது இருக்கும். இந்த காரை ஹோண்டா ஆர்&டி ஆசியா பசிபிக் மற்றும் ஹோண்டா குழு இந்தோனேசியாவில் உருவாக்கியுள்ளது.
காரின் கான்செப்ட் கண்களைக் கவர்கிறது
Honda SUV RS கான்செப்ட் தோற்றத்தில் சக்தி வாய்ந்தது, இது DRL-களுடன் கூடிய கூர்மையான LED ஹெட்லேம்ப்கள், அகலமான மற்றும் கவர்ச்சிகரமான முன் கிரில் மற்றும் பரந்த காற்று உட்கொள்ளும் கூர்மையான பாணி பம்பர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஃபாக்லாம்ப்களுக்கு சறுக்கல் தட்டுகள் மற்றும் கிடைமட்ட ஸ்லேட்டுகள் ஆகியவை இதில் உள்ளன. இதே ஸ்டைலில் காரின் தயாரிப்பு மாடலும் சந்தையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ:கார் வாங்கணுமா? அசத்தலான மைலேஜுடன் பட்ஜெட்டுக்குள் வரும் 5 டாப் கார்கள்
கான்செப்டின் சக்கர வளைவுகள் மிகவும் அழகாக இருக்கின்றன. இவற்றின் கீழே பெரிதாக்கப்பட்ட அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே நீங்கள் வலுவான ரூஃப் ரெயில்சைக் காண முடியும். இது காரின் தோற்றத்தை இன்னும் கம்பீரமாக்குகிறது. பின்புறத்தில், ஸ்போர்ட்டி தோற்றத்துடன் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட LED டெயில்லேம்ப்கள் உள்ளன.
இந்தியாவில் எப்போது அறிமுகம்?
காரின் (Car) உட்புறம் பற்றிய விவரங்களை ஹோண்டா இன்னும் வழங்கவில்லை. மேலும் புதிய எஸ்யூவி ஆர்எஸ் கான்செப்ட்டின் எஞ்சின் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. உற்பத்தி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் எஸ்யூவியின் ஆர்எஸ் மாறுபாடும் சந்தையில் கொண்டு வரப்படும் என்று கூறினால் அது தவறாகாது.
புதிய SUV RS கான்செப்ட்டின் தயாரிப்பு மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பதை ஹோண்டா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்சமயம், இந்நிறுவனம் குறிப்பாக ஒரு சிறிய எஸ்யூவியை இங்கு தயாரித்து வருகிறது. இது அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.
ALSO READ:ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி, 2 ஆண்டுகளுக்கான இலவச சர்வீசிங்: அசத்தும் Ola Cars
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR