ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானப்படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நேற்று பிற்பகல் இந்த சோதனை நடைபெற்றது. எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை வானில் பறந்த பான்ஷி ரக ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்தது


இதுவரை 7 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் ஆகியோருக்கு பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.