கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு எத்தனை சம்பளம் மற்றும் எத்தனை பங்குகள்   வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு (2020) சம்பளமாக 2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி) உள்பட பல்வேறு வழிகள் மூலம் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுந்தர் பிச்சை 2 மில்லியன் டாலர் சம்பளத்தை பெறுவார் என ஆல்பபெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் பங்கு உள்ளிட்டவற்றில் சுந்தர் பிச்சையின் பங்காக 240 மில்லியன் டாலர் (ரூ.1700 கோடி) வழங்கப்பட உள்ளது.


2004-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். இதுவே உலக அளவில் கூகுள் மிகவும் புகழ்பெற்ற இன்டர்நெட் பிரவுசராக மாற காரணமாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020-ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022-ஆம் ஆண்டு வரையிலான பங்காக 90 மில்லியன் டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு டிசம்பர் 19-ஆம் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளது.