ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி... இனி நீருக்கடியிலும் நீங்கள் `மஜா` பண்ணலாம்!
Apple 16 Series Underwater Mode: நீருக்கடியிலும் எளிமையாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் அம்சத்தை ஆப்பிள் அதன் ஐபோன் 16 சீரிஸில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
Apple 16 Series Underwater Mode: ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அறிமுகமான பிறகு கலவையான விமர்சனத்தை பெற்றது. அதாவது, சிற்சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்பட்டது.
இருப்பினும், விற்பனையில் வழக்கம்போல சக்கைப்போடு போடுகிறது. மேலும், ஐபோன் 16 சீரிஸ் மீதான எதிர்பார்ப்பும் தற்போது கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐபோன் 16 சீரிஸ் குறித்த பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்தபடியே இருக்கின்றன.
ஐபோன் 16: லீக்கான தகவல்கள்
இதுவரை ஐபோன் 16 தொடரின் பல அம்சங்கள் ஆன்லைனில் கசிந்திருக்கின்றன. அதாவது, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என தகவல் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்... ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!
இந்த இரண்டு போன்களிலும் A18 Pro Bionic சிப் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. கேமரா குறித்து பேசுகையில், iPhone 16 Pro Max மொபைலில் 48MP Sony IMX903 முதன்மை கேமரா கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்
அந்த வகையில், சமீபத்தில் இணையத்தில் வைரலான அறிக்கை ஒன்றில், ஐபோன் 16 சீரிஸ் இடம்பெற உள்ள புதிய தனித்துவமான அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேட்டால், நிச்சயமாக ஐபோன் பிரியர்கள் நிச்சயமாக பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் எனலாம்.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ஐபோன் 16 சீரிஸில் நீருக்கடியில் பயன்படுத்தும் அம்சத்தை கொண்டு வரும் என லீக்கான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அம்சங்கள் "Underwater Mode" என்ற பெயருடன் வருகிறது. இந்த புதிய அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் நீருக்கடியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக எடுக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரமான ஐபோனை பயன்படுத்த தற்போதைய iOS மென்பொருள் போதுமானதாக இல்லை என்று காப்புரிமையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறையைப் போக்கதான் இது பயன்படும். அதாவது, இன்டர்வாட்டர் யூசர் இன்டர்ஃபேஸ் (Interwater User Interface) என்பது இனி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதில், பெரிய பட்டன்கள், ஸ்ட்ரீம்லைன் மெனு மற்றும் ஹார்டுவேர் பட்டன்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
ஃபோன் 16 தண்ணீரில் வேலை செய்யும்!
அதாவது, தண்ணீரில் கேமராவைக் கட்டுப்படுத்த, பயனர்கள் வால்யூம் பட்டன்களை பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. பயனர்கள் வால்யூம் பட்டன்களை பயன்படுத்தி வீடியோ அல்லது புகைப்படத்தை ஜூம் செய்யவோ அல்லது ஜூமை வெளியே எடுக்கவோ முடியும். இந்த செயல்பாடு ஐபோன் 16 மொபைலில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த தவறுகளை சரி செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ