போனா வராது... அதிரடி விலையில் ஐபோன் 15 ப்ரோ... அதுவும் ஐபோன் 14 ப்ரோவை விட கம்மி!

Apple 15 Plus Price Reduction: பழைய ஆப்பிள் ஐபோன் 14 பிளஸை விட புதிய ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மிகவும் குறைந்த விலையில் தற்போது கிடைக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2024, 05:21 PM IST
  • இந்த சலுகை விரைவில் முடிவடைய உள்ளதால் வாடிக்கையாளர்கள் விரைவாக இதனை பெறவும்.
  • ஆப்பிள் 14 பிளஸ் சுமார் ரூ.79,900 ஆகும்.
  • ஆப்பிள் 15 ப்ரோ அடிப்படை விலை ரூ.1,34,900 ஆகும்.
போனா வராது... அதிரடி விலையில் ஐபோன் 15 ப்ரோ... அதுவும் ஐபோன் 14 ப்ரோவை விட கம்மி!  title=

Apple 15 Pro vs Apple 14 Plus Price: ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்தான் லேட்டஸ்ட் மற்றும் அப்டேட்டான ஐபோன் ஸ்மார்ட்போனாகும். இருப்பினும், ஐபோன் 15 ப்ரோ தற்போது, அதன் முந்தைய மாடலான ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மொபைலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற சொன்னால் நம்ப முடியுமா?.

பிளிப்கார்டில் தள்ளுபடி

ஆம், மேலே நீங்கள் வாசித்த அந்த தகவல் சரியானதுதான்.  ஐபோன் 14 பிளஸ் மொபைலை விட குறைந்த விலையில் ஐபோன் 15 ப்ரோ கிடைக்கிறது. அது வேறெங்கும் இல்லை. முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் குடியரசு தின தள்ளுபடி விற்பனையில் இந்த சலுகை கிடைக்கிறது. 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல் ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடலுடன் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை ஐபோன் 15 சீரிஸ் என பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ பல புதிய அம்சங்கள் மற்றும் பல மேம்படுத்தல்களுடன் சந்தைக்கு வந்தது.

மேலும் படிக்க | Pulsar, Duke பைக்குடன் மோத வரும் ஹீரோவின் புதிய பைக்... லீக்கான புகைப்படம்
 

ஐபோன் 15 ப்ரோ vs ஐபோன் 14 பிளஸ்

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் 60 ஆயிரத்து 990 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு வெறும் 70 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது. 

புதிய ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ அதன் முந்தைய மாடலான ஐபோன் 14 பிளஸ் மாடலுடன் ஒப்பிடும்போது புதிய அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக, இந்த மாடலில் புதிய டைட்டானியம் சேஸ், USB-C போர்ட், ஆக்ஷன் பட்டன் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ அதன் அடிப்படை விலையில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 910 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 900 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, வாங்குபவர்கள் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உடன் பெறலாம்.

மேலும் படிக்க | Whatsapp Fraud: இப்படி எல்லாம் வாட்ஸ்அப்பில் மோசடி நடக்கிறது.. மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்

தள்ளுபடிகள் எப்படி?

இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மொபைலின் விலை 1 லட்சத்து 27 ஆயிரத்து 990 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பிளிப்கார்ட் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக 57 ஆயிரத்து 990 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது. அதாவது, அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவை நீங்கள் 60 ஆயிரத்து 990 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் 70 ஆயிரம் ரூபாய் விலையில் பெறலாம். 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ 70 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ அதன் முந்தைய மாடல்களில் இருந்து எல்லா வகையிலும் வித்தியாசமானதாக உள்ளது. புதிய ஐபோனின் விளிம்புகள் சற்று வளைந்திருப்பது, அதனை இறுக்கமாக பிடிப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டைட்டானியத்தின் பயன்பாடு அதை கணிசமாக இலகுவாக்கியுள்ளது எனலாம்.

மேலும் படிக்க | ராமர் பக்தர்களுக்கு அதிவேக டேட்டா மற்றும் அழைப்பு வசதி கிடைக்கும் -ஜியோ, ஏர்டெல் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News