ஆப்பிளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புதிய சீரிஸ் ஐபோன் 14 சீரிஸ், வரும் மாதம் அதாவது செப்டம்பர் 2022ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சீரிஸை வாங்க பலர் காத்திருக்கிறார்கள், இதற்கிடையில் பலர் ஐபோன் 13 ஐ வாங்க பிளான் செய்கின்றனர். அந்த வகையில் ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்ல செம்ம ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை எங்கிருந்து எப்படிப் பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் 13 ஐ இங்கிருந்து வாங்குங்கள்
இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் குரோமாவிலிருந்து வாங்கலாம். சுதந்திர தினத்தன்று குரோமாவில் ஒரு விற்பனை இயங்குகிறது, இதற்கு குரோமா சுதந்திர தின விற்பனை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விற்பனையில், 128ஜிபி ஐபோன் 13 ரூ.79,900க்கு பதிலாக 11% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.70,990க்கு விற்கப்படுகிறது.


மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி


3 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் இப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்
3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் கட்டணமில்லா இஎம்ஐ என்ற விருப்பத்தை ஏற்க வேண்டும். ஐபோன் 13க்கு Qik EMI கார்டு மூலம் பணம் செலுத்தினால், அதன் முழு விலையை மாதத்திற்கு 2,958 ரூபாய்க்கு செலுத்தலாம். 24 மாதங்களில் இந்த விலையை நீங்கள் செலுத்த வேண்டும்.


Qik EMI கார்டு என்றால் என்ன
Qik EMI கார்டு என்றால் என்ன என்று நீங்கள் யோசித்தால், அதைப் பற்றிய அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். டாடாவின் புதிய கட்டண செயலியான Tata Neu ஆப் மூலம் Qik EMI கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதில், உங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கடன் வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒரு இஎம்ஐ கிரெடிட் கார்டு ஆகும். இந்த கார்டின் உதவியுடன் நீங்கள் குரோமாவிலிருந்து ஐபோன் 13 இன் இஎம்ஐ செலுத்தலாம்.


ஐபோன் 13 இன் அம்சங்கள்
இந்த ஒப்பந்தத்தில், ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் ஐபோன் 13 இன் 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு பற்றி காண உள்ளோம், 5ஜி சேவைகளுடன் கூடிய இந்த ஐபோன் 13 ஆனது 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12எம்பி மற்றும் முன் கேமராவும் 12எம்பி ஆகும். இரட்டை சிம் சேவைகள் கொண்ட இந்த போனில், உங்களுக்கு ஒரு வருட பிராண்ட் வாரண்டியும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ