டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே 4 எலக்ட்ரிக் கார்களை சந்தையில் விற்பனை செய்து வந்தாலும், தற்போது மற்றொரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய மின்சார வாகனம் தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் சமூக ஊடக தளத்தில் டீஸர் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள டாடா மோட்டர்ஸ், இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், நிறுவனத்தின் ICE வேரியண்ட் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டர்ஸ் தயாராகி வருகிறது. டாடாவின் நவீன எலக்ட்ரிக் காரில் என்னென்ன வசதிகள் இருக்கும்? அதன் சிறப்பம்சங்கள் யாவை என்பதை தெரிந்துகொள்வோம்.


Tata Curvv EV 


ஆட்டோ எக்ஸ்போவில் டாடா கர்வ் எலக்ட்ரிக் காரின் டீசல் எஞ்சின் வேரியண்ட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. கூபே எஸ்யூவி காரான டாடா கர்வ் மின்சார வாகனத்தில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 260 என்எம் டார்க் மற்றும் 115 பிஎஸ் பவரை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பில் அம்சங்கள்


வாகனத்தின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் டாடா மோட்டர்ஸ், டாடா கர்வ் காரில் 360 டிகிரி கேமராவை வைத்திருக்கும் என்று நம்புகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​இந்த காரின் முன்பக்கத்தில் IRVM க்கு கீழே ஒரு கேமரா இருந்தது.  360 டிகிரி கேமரா அல்லது ADAS அம்சம் இருக்கலாம் என்ற ஊகங்களை இது ஏற்படுத்தியிருக்கிறது.  


மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!


Tata Curvv வடிவமைப்பு


டாடாவின் புதிய மின்சார வாகனத்தில் வடிவமைப்பு கலக்கலாக இருக்கிறது. கண்கவர் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை பார்க்கும்போது, ஸ்போர்ட்ஸ் கார் என தோன்றுகிறது, ஆனால் இது வெறும் எலக்ட்ரிக் வாகனம் தான் என்பதால், இந்த நியூ லுக் இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.


காரின் பின்புறம் கண்கவர் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கர்வ் கார், 3.0 தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. டாடா கர்வ் காரின் முன்புறாத்தில் பெரிய கிரில், டாடாவின் லோகோ மற்றும் எல்இடி ஹெட்லைட்கள் இருக்கின்றான. விளக்குகள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மாற்றப்பட்டுள்ளன.


யாருக்கு போட்டி?
புதிய டாடா கர்வ் காரின் பின்புறத்தில் டெயில் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறம் கூபே வடிவமைப்பு என்றால், 18 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 422 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட டாடா கர்வ், குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய வாகன சந்தையில், Creta, Kia Seltos, Skoda Kushaq, Maruti Grand Vitara, Honda Elevate மற்றும் MG Astor ஆகிய கார்களுக்கு டாடா கர்வ் போட்டியாக இருக்கும் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.  


மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ