ஹைபிரிட்? இல்லை மின்சாரக் கார்! உங்களுக்கு ஏற்ற கார் எது? அலசி ஆராயும் சிறப்பு கட்டுரை!

Hybrid VS Electric Vehicle : ஹைபிரிட் காரின் முக்கிய அம்சங்கள், மின்சார கார் இல்லை ஹைபிரிட் கார் சிறந்ததா? தொழில்நுட்பம் முதல் கார்களுக்கான செலவு வரை... அலசும் கட்டுரை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2024, 08:19 AM IST
  • ஹைபிரிட் காரின் முக்கிய அம்சங்கள்
  • மின்சார கார் சிறந்ததா இல்லை ஹைபிரிட் காரா?
  • தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில் கார்களுக்கான செலவு
ஹைபிரிட்? இல்லை மின்சாரக் கார்! உங்களுக்கு ஏற்ற கார் எது? அலசி ஆராயும் சிறப்பு கட்டுரை!  title=

தொழில்நுட்பத்தில் துரிதமாக ஏற்படும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வாழ்வை சட்டென்று மாற்றிவிட்டுகின்றன. சக்கரம் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு தொடங்கிய மாற்றங்களின் துரிதமானது, வாகனங்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு ஜெட் வேகத்தில் மாறிவிட்டது. ஆனால், வாகனங்கள் பற்றிய நமது எண்ணங்களும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் அளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் துரிதமாகிவிட்டன.

பெட்ரோல் அல்லது டீசல் என இரண்டு வாகனங்கள் மட்டுமே சந்தையில் இருந்துவந்த நிலையில், அதன்பிறகு எரிவாயு பயன்பாடு வந்த நிலையில், தற்போது ஹைபிரிட் கார்களின் புழக்கம் அதிகமாகிவருகிரது. ஹைபிரிட் வாகனங்களையே வாங்க இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புவதால் ஹைபிரிட் டெக்னாலஜி முறை தற்போது துரித வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
 
ஹைபிரிட் கார்கள்
 ICE எனப்படும் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இரண்டும் கலந்த ஒரு கார் ஹைபிரிட் கார் என்று அழைக்கப்படுகிறது. ஹைபிரிட் கார்களில் பெட்ரோலில் வாகனம் இயங்கும், அதேபோல, மின்சாரத்திலும் கார் ஓடும். இரண்டு விதமான எரிபொருளில் இயங்கும் தன்மை கொண்ட இந்த கார்களின் இன்டெர்னல் கம்பஷன் என்ஜினுடன், குறைந்த பட்சம் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டராவது பிணைக்கப்பட்டிருக்கும். அதாவது ஹைபிரிட் கார்களில் பொருத்தப்படும் எஞ்சின்களில் எரிபொருள் மற்றும் மின்சாரம் இரண்டுமே வாகனத்தை இயக்க பயன்படுத்தப்படுகிறது. 

ஹைபிரிட் கார்களின் வகைகள் 

பெட்ரோல் அல்லது டீடல் எந்த எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதும், எஞ்சின் மற்றும் மின் மோட்டார் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஹைபிரிட் கார்கள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார், இவற்றில் எது சிறந்தது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு இணக்கமானவை. இவை இரண்டுமே, பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் கார்களை விட குறைவான மாசை உருவாக்குவதால் எரிபொருட்களைவிட எலக்ட்ரிக் கார்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. ஆனால் தேவையின் அடிப்படையில் எந்த கார் சிறந்தது என்பதைத் தெரிந்துக் கொள்வது நல்லது. அது, நீங்கள் கார் வாங்கும்போது, எந்தக் காரை தேர்ந்தெடுக்கலாம் என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...

ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் 

எரிபொருள்

மின்சார மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஹைப்ரிட் கார்கள் பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் கார்களில் மின்சார மோட்டார் குறைந்த வேகத்தில் வாகனம் செல்லும்போது இயங்குகிறது, எரிபொருள் மூலம் வாகனம் செலுத்துவதற்கான இயந்திரமானது, நெடுஞ்சாலையில் அல்லது பேட்டரி குறைவாக இருக்கும்போது செயல்படுகிறது. இதுவே, 
எலக்ட்ரிக் கார்கள்: எலக்ட்ரிக் கார்கள் மின்சாரத்தில் மட்டுமே இயங்கும், ஏனென்றால் இவற்றில் பெட்ரோல் என்ஜின்கள் இல்லை.

சார்ஜிங்

ஹைப்ரிட் கார்களை சார்ஜிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வகைக் கார்களில் பிரேக்குகளைப் பயன்படுத்தும்போது மின் மோட்டார் ஜெனரேட்டராகச் செயல்படுகிறது. இதன் மூலம், அவை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் பேட்டரிகளை சார்ஜ் செய்கின்றன.
ஆனால், சார்ஜ் செய்வ்தற்காக எலக்ட்ரிக் கார்களை பவர் அவுட்லெட்டில் இணைத்து தான் சார்ஜிங் செய்யவேண்டும். எலக்ரிக் வாகனத்தை உங்கள் வீட்டிலோ, பொது சார்ஜிங் நிலையங்களிலோ சார்ஜ் செய்ய வேண்டும்.

ரேஞ்ச்

மின்சாரத்தால் இயங்கும் கார்களை விட, ஹைப்ரிட் கார்கள் பொதுவாகவே அதிக ரேஞ்ச் கொண்டவையாக இருக்கும். ஏனெனில் ஹைபிரிட் கார்களில் பேக்கப் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளன. மின்சார கார்களின் வரம்பு, அவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது என்றபோதிலும், இவை இன்னும் ஹைபிரிட் கார்களை விட குறைவான வரம்புகளையேக் கொண்டுள்ளன.  

கார் விலை

ஹைப்ரிட் கார்களின் விலையானது, எலக்ட்ரிக் கார்களை விட விலை குறைவாக இருக்கும். இருந்தாலும், எலக்ட்ரிக் கார்களின் விலை குறைவாக இருந்தாலும், பராமரிப்பு செலவு ஹைபிரிட் கார்களில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், மின்சாரத்தின் விலைக்கும், பெட்ரோலின் விலைக்குமான வித்தியாசம் நீண்டகால அடிப்படையில் காருக்கு நாம் செய்யும் செலவை கணிசமாக அதிகரிக்கலாம்,  

சுற்றுச்சூழல் மாசுபாடு

பெட்ரோலால் இயங்கும் கார்களை விட ஹைப்ரிட் கார்கள் குறைவான மாசை உருவாக்குகின்றன என்றாலும் மாசு உருவாகிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதுவே, மின்சாரக் கார்கள் காற்றை மாசுபடுத்தாது என்பதால், சுற்றுச்சுழலுக்கு உகந்த கார்கள் என்றால் மின்சார வாகனம் தான் என்றே சொல்லலாம்

எந்த கார் வாங்கலாம்?

பொதுவாக, கார் வாங்க முடிவு செய்பவர்கள் எந்தக் காரை வாங்கலாம் என்ற கேள்வியை ஆயிரம் முறையாவது கேட்பார்கள். அது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை மற்றும் வேலையின் தன்மையைப் பொறுத்தது. காரின் பயன்பாடு எவ்வளவு அடிக்கடி ஏற்படும் என்பதின் அடிப்படையில் முடிவு செய்யலாம். அதிலும், காரை பயன்படுத்தும்போது குறுகிய தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்குமா அல்லது நீண்ட தூரம் பயணம் செய்பவரா என்பதன் அடிப்படையில் எடுக்கலாம். நீண்ட தூரம் பயணிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பவர்கள் ஹைப்ரிட் காரை தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க | Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News