மல்டி பிளான் சேவை நிறுத்த டாட்டா ஸ்கை முடிவு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
டாட்டா ஸ்கை நிறுவனம் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் மல்டி டிவி பிளான் சேவை நிறுத்த முடிவு செய்துள்ளது.
புது டெல்லி: டாட்டா ஸ்கை நிறுவனம் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் மல்டி டிவி பிளான் சேவை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக ஒவ்வொரு டிவிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
டி.டி.எச் சேவையில் முன்னினி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது டாட்டா ஸ்கை. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் மல்டி டிவி செட்டாப் பாக்ஸ் சேவை. அதாவது ஒரே குடும்பத்தார் தனித்தனியே டிவி வைத்திருப்பவர்கள், அலுவலகங்கள் மற்றும் மிகப்பெரிய கடைகளில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொலைகாட்சிகளை வைத்திருப்பவர்களுக்கு மல்டி டிவி செட்டாப் பாக்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தக் கட்டணத்தில் சலுகை மூலம் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட டிவிகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
வருகின்ற ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து,இந்த சலுகை முற்றிலும் நிறுத்தப்படுவாதாக அறிவித்துள்ளது அதற்கு பதிலாக ஒவ்வொரு டிவிக்கும் தனித்தனியாக கட்டணம் வசூல் செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் புதிய திட்டங்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.