GPay, PhonePe-வை காலி செய்ய திட்டம்போடும் TATA - விரைவில் புதிய UPI செயலி
இந்தியாவில் பிரபல பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு போட்டியாக புதிய யுபிஐ (UPI) செயலியை அறிமுகப்படுத்த டாடா குரூப் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களின் ஒன்றான டாடா குழுமம் விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மார்க்கெட்டில் களமிறங்க முடிவெடுத்துள்ளது. இதனால், Google Pay, Phonepe மற்றும் Paytm உள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டாடா நிறுவனத்தைப் பொறுத்த வரை உப்பு முதல் எஃகு வரை பலதுறைகளில் தடம் பதித்து இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளைக் சேவையை அறிந்த டாடா நிறுவனம், இந்த மார்கெட்டில் களமிறங்கவும் முடிவெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக NPCI-யிடம் இந்த செயலியையை தொடங்குவதற்கான அனுமதியைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா நிறுவனம் தொடங்க இருக்கும் UPI செயலியானது டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகப் பிரிவான டாடா டிஜிட்டலின் கீழ் இருக்கும். அதன் UPI அமைப்பை இயக்க ஐசிஐசிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சம்பளம் பெறும் வகுப்பினருக்கு முக்கிய செய்தி, ஓய்வூதியம் இரட்டிப்பாகுமா
அதாவது, வங்கி அல்லாத தளங்கள் அதன் UPI வசதியை செயல்படுத்த வங்கியுடன் கூட்டாளராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால், டாடா குழுமம் ஐசிஐசிஐ வங்கியுடன் கரம் கோர்க்க உள்ளது. UPI செயலி மூலம் பரிவர்த்தனைகளின் அளவு அதிகமாக இருந்தால், பரிவர்த்தனைகளை விநியோகிக்க தனியார் நிறுவனங்கள் பல வங்கிகளுடன் கூட்டணி வத்துள்ளன. கூகுள் பே, நிறுவனம் அதன் உயர் பரிவர்த்தனை சுமையை பகிர்ந்து கொள்ள SBI, HDFC மற்றும் ICICI வங்கிகளுடன் இணைந்துள்ளது.
மேலும் படிக்க | EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம்
இப்போதைய சூழலில் இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான UPI பரிவர்த்தனைகள் Google Pay அல்லது PhonePe செயலிகளின் வழியே நடைபெறுகின்றன. Paytm, Amazon Pay மற்றும் WhatsApp pay போன்ற பிற யுபிஐ செயலிகள் ஒப்பீட்டளவில் குறைந்த மார்க்கெட் ஷேரைக் கொண்டுள்ளன. தற்போது இந்த போட்டியில் டாடா குழுமமும் களத்தில் இருப்பதால், போட்டி அதிகரிக்ககூடும். டாடா டிஜிட்டல் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவை டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ள பல துணை நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. இந்தப் பட்டியலில் Bigbasket, 1MG Technologies Private Limited போன்ற நிறுவனங்களும் உள்ளன. கடந்த ஜனவரியில், டாடா குழுமம் நிதி தொர்பான மார்க்கெட்டில் கால்பதிக்கும் வகையில் டாடா ஃபின்டெக் நிறுவனத்தையும் நிறுவியது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR