நம் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாக மாறிவிட்ட WhatsApp, நாம் மற்றவர்களுடன் உரையாடவும் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுகிறது. கூடுதலாக, நிறுவனம் தனது பயனர்களின் அனுபவத்தை அதிகரிக்க தினமும் செயலியில் புதிய அம்சங்களையும் புதிய புதுப்பிப்புகளையும் கொண்டுவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக மக்கள் நண்பர்கள், குடும்பங்கள் முதல் அலுவலகம் வரை அனைவருடனும் இந்த செயலி மூலம் பல தகவல்களை பகிர்ந்து கொள்கிரார்கள்.


WhatsApp-ல் இருக்கும் சில settings உங்கள் தொலைபேசிக்கு ஆபத்தாக விளையக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த அமைப்புகளை நீங்கள் மாற்றவில்லை என்றால், உங்கள் தொலைபேசியை யார் வேண்டுமானால் சுலபமாக ஹேக் செய்யலாம். இந்த அமைப்புகளைப் பற்றியும் இதனால் உங்கள் தொலைபேசிக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றியும் இனி பார்க்கலாம்.


மெசேஜ்கள் தானாகவே மறையும் அம்சம்


WhatsApp சமீபத்தில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அம்சத்தை (Disappearing messages) வெளியிட்டது. இதன் மூலம் உங்கள் மெசேஜுகள் தானாகவே நீக்கப்படும். ஆனால் தனியுரிமையின்படி இதுவும் ஆபத்தான அம்சம்தான். இருப்பினும், WhatsApp-ல் தானாக நீக்கப்படும் மெசேஜ்கள் குறைந்தது 7 நாட்களுக்கு இருக்கும்.


அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மெசேஜ்கள் நோடிஃபிகேஷனில் இருக்கும். அதே போல் மற்ற பயனர்களும் இந்த சேட்களைப் படிக்கலாம். மேலும், மெசேஜ்களை பெறும் பயனர் உங்கள் செய்தியை பேக் அப்பிலும் வைத்திருக்க முடியும்.


ALSO READ: Tech trick: இலவச Wi-Fi இணைப்பை பயமின்றி பயன்படுத்த இந்த trick உங்களுக்கு உதவும்  


Default-ஆக சேவ் ஆகும் படங்கள்


உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் தானாகவே சேவ் செய்யப்பட்டால், உடனடியாக setting-ஐ மாற்றவும். சைபர் நிபுணர்களின் கூற்றுப்படி, புகைப்படங்கள் சில நேரங்களில் ட்ரோஜன் ஹார்ஸைப் (Trojan Horse) போலவே செயல்படும். அவற்றின் உதவியுடன், ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை எளிதில் ஹேக் செய்ய முடியும். இதைத் தவிர்க்க, உடனடியாக உங்கள் வாட்ஸ்அப் setting-க்குச் செல்லவும். இப்போது chat-ஐக் கிளிக் செய்து, Save to Camera Roll-ஐ ஆஃப் செய்யவும்.


ICloud-ல் WhatsApp-பின் பேக் அப் எடுக்க வேண்டாம்


Apple-ன் பாதுகாப்பு மிகவும் வலுவானது என்று கூறப்படுகிறது. ஆனால் எப்போதும் WhatsApp-ன் backup ICloud-ல் எடுக்கக்கூடாது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். எந்தவொரு வாட்ஸ்அப் சேட்டும் ICloud க்குச் சென்ற பிறகு ஆப்பிளுக்கு சொத்தாக மாறிவிடும். ICloud-க்கு போனவுடன் உங்கள் சேட்கள் டீக்ரிப்ட் ஆகி விடுகின்றன. அதாவது பாதுகாப்பு முகவர்கள் Apple-லிருந்து உங்கள் chat-களை எடுக்க முடியும். இந்த காரணத்திற்காக வல்லுநர்கள் ICloud இல் backup எடுக்க வேண்டாம் என்கிறார்கள். 


ALSO READ: Google Photos இன்னும் சில மாதங்களே இலவசமாகக் கிடைக்கும்: Google-ன் அடுத்த அதிரடி!!


 கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR