கொரோனா காலத்தில் இணைய பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த பிரவுச்ஸரைப் பயன்படுத்தி, ஏதாவது ஒன்றை நாம் தினமும் தேடுகிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நேரங்களில் கூகிள் போன்ற சிறந்த தளங்களில் கூட தேடுவது எளிதாக கிடைப்பதில்லை. நீங்கள் எதிர்ப்பார்க்கும் விஷயம் அல்லது தகவல் கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்படலாம். அல்லது எதிர்பார்த்தது கிடைக்க அதிக நேரம் ஆகலாம். ஆனால், சரியான, எதிர்பார்த்த தகவல்களை  பொன்னான நேரம் வீணாகாமல் எளிதில் பெற சில எளிய வழிகளை பின்பற்றலாம். 


Double Inverted Coma ("") - கூகிளில் (Google) எந்தவொரு பிரபலத்தின் கருத்துகளை நீங்கள் அறிய விரும்பினால், அது தொடர்பான கட்டுரைகளை படிக்க விரும்பினால், நீங்கள் டபிள் இன்வெர்டட் கமாவை பயன்படுத்த வேண்டும். இவற்றின் உதவியுடன், நீங்கள் விரும்பியபடி சரியாக தகவல்கள் பெறுவீர்கள், உங்கள் பொன்னான நேரம் வீணாகாது.

Asterisk  (*) - நீங்கள் கூகுளில் (Google) ஏதாவது தேடும் போது, அதைப் பற்றி கூகிளின் தேடல் பாக்ஸில்,  ஒரு முழு வரியையும் எழுத முயற்சிக்கும் போது, அந்த வரியிலிருந்து இரண்டு அல்லது மூன்று சொற்களை மறந்துவிட்டீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம், நீங்கள் செய்ய வேண்டியது, அந்த இடத்தில் அதற்கு பதிலாக நீங்கள் நட்சத்திரக் குறியீடு (Asterisk ) (*) பயன்படுத்துங்கள். நீங்கள் விரும்பியபடியே தேடிய விஷயம் கிடைக்கும்.


ALSO READ | Microsoft Windows 11: அசத்தலான தோற்றம்; அசத்தலான அம்சங்கள்

Minus (-) - கூகிளில் எதையும் தேடும்போது கழித்தல் குறியை அதாவது, Minus (-) குறியை பயன்படுத்தி தேவையற்ற எல்லா வலைத்தளங்களையும் நீக்கலாம். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் விரும்பியபடி தகவல்கள், உங்கள் நேரம் வீணாகாது.


ALSO READ | Jio வழங்கும் ₹3,499 திட்டம்; அப்படி என்ன தான் இருக்கு; விபரம் உள்ளே..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR