நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை சொல்லும் புதிய செயலி அறிமுகம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் தினசரி உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று அதிகமாக இல்லை என்றாலும் எதோ கொஞ்சமாவது நமக்கு தெரியும். நாம் அனைவருக்கும் தெரியும் பாலில் காசியம் இருக்கிறது. பேரீட்சையில் இருன்பு சத்து இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இன்னும் சில உணவுகளில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது. 


ஆனால், இப்போது கண்டுபிடிக்கபட்ட புதிய கருவி உங்கள் கையில் இருந்தால் போதும். உங்கள் கையில் இருக்கும் உணவில் என்னென்னே சத்துக்கள் இருக்கிறது என்று ரோபோ போல் மடமடவென கூறிவிடுவீர்கள். அந்த கருவியின் பெயர் டெல்ஸ்பேக் ஃபுட் ஸ்கேனர் (TellSpec food scanner). இந்த கருவியின் மூலம் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவிலும் உள்ள ஊட்ட சத்துக்களை உடனே இந்த கருவி ஸ்கேன் செய்து நமக்கு கூறிவிடுகிறது.


 


இந்த கருவியை உங்களுடைய மொபைலுடன் இணைத்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த ஸ்கேனரை நாம் உண்ணும் உணவின் அருகில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இதையடுத்து, இந்த கருவியில் உள்ள சென்சாரின் மூலம் உணவு பொருட்களில் எவ்வளவு கார்போஹைட்ரேட் உள்ளது, எவ்வளவு கொழுப்புசத்து உள்ளது. எவ்வளுவு புரதசத்து உள்ள்ளது என்பதை கண்டறிந்து அந்த தகவலை நமது மொபைலுக்கு அனுப்பிவிடும். 



அந்த தகவலை நாம் எளிமையாக காணும்படி மொபைல் திரையில் தெரியும். மொபைலில் உள்ள இந்த தகவல்கள் டெல்ஸ்பேக் நிறுவனத்தின் செர்வரில் சேமித்து வைக்கப்படும். பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். உணவில் உள்ள சத்துக்கள் மட்டும் இல்லை எவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்றும் தெளிவாக கூறுகிறது.