டிவிட்டர் சிஇஓ பதவி நீக்கம் செய்யப்பட்டால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்பட்டால், 300 கோடிகளுக்கும் மேல் எலான் மஸ்க் காம்பன்ஷேஷன் கொடுக்க வேண்டியிருக்கும்.
உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான டிவிட்டர் சுதந்திரம் குறித்து பேசிய எலான் மஸ்க், அதில் சில விஷயங்கள் மேம்படுத்த வேண்டியிருப்பதாக கூறினார். குறிப்பாக எடிட் பட்டன் கொண்டுவரப்பட வேண்டும், மெசேஜ் அதிகமாக டைப் செய்யும் வகையில் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டிவிட்டரை வாங்குவதற்கு அண்மையில் விருப்பம் தெரிவித்தார் மஸ்க்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவில் பெரும் மாற்றம் - வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி
மிகப்பெரிய ஆஃபர் ஒன்றையும் அறிவித்த மஸ்க், இதுவே இறுதி ஆஃபர் என்றும் திட்டவட்டமாக கூறினார். அவரின் இந்த ஆஃபர் பற்றி டிவிட்டர் நிறுவனம் தீவிரமாக ஆலோசித்தது. பங்குதாரர்களின் நலனைக் கொண்டு மஸ்கின் ஆஃபருக்கு சம்மத்தித்த டிவிட்டர், இது குறித்து மஸ்க் உடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கியது. முடிவில், 44 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு டிவிட்டரை வாங்குதற்கு டீல் முடிந்துள்ளது. அதாவது, மஸ்க் வசம் டிவிட்டர் செல்ல உள்ளது.
இது குறித்து டிவிட்டர் ஊழியர்களிடம் பேசிய இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால், டிவிட்டர் எதிர்காலம் குறித்து தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் எந்த திசையில் டிவிட்டர் பயணிக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை இருப்பதாகவும் பராக் அகர்வால் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | யூடியூபில் கட்டாய விளம்பரங்களை நீக்குவது எப்படி? இதோ டிப்ஸ்
இதனிடையே, டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலின் எதிர்காலம் குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. மஸ்க் வசம் டிவிட்டர் சென்றுவிட்டால், அந்தப் பதவியில் தொடர்ந்து பராக் அகர்வால் நீடிப்பாரா? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டால், எவ்வளவு தொகை தரப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். பராக் அகர்வால் பணி நீக்கம் செய்யப்பட்டால் சுமார் இந்திய ரூபாயில் 322 கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR