யூடியூபில் கட்டாய விளம்பரங்களை நீக்குவது எப்படி? இதோ டிப்ஸ்

யூடியூப்பில் கட்டாய விளம்பரங்களை பார்ப்பதை நீங்கள் தவிர்க்க முடியும். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2022, 09:38 PM IST
  • யூ டியூப் டிரிக்ஸை தெரிந்து கொள்ளுங்கள்
  • விளம்பரம் பார்க்காமல் தடுக்கலாம்
  • ஈஸ்டியா டிப்ஸ் மூலம் விளம்பரத்தை தடுக்கலாம்
யூடியூபில் கட்டாய விளம்பரங்களை நீக்குவது எப்படி? இதோ டிப்ஸ் title=

ஆரம்பத்தில் யூடியூப்பில் அதிக விளம்பரங்கள் இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில், யூடியூப் இல்லாத விளம்பரங்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லா வீடியோக்களுக்கும் விளம்பரங்களை பார்க்க முடியும். பல வீடியோக்களுக்கு ஸ்கிப்பிங் ஆப்சனும் இருக்கிறது. இந்த ஆப்சனைப் பயன்படுத்தி நீங்கள் விளம்பரங்களை பார்க்காமல் தவிர்க்க முடியும். 

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவில் பெரும் மாற்றம் - வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இப்போது, கட்டாய  விளம்பரங்கள் பல வீடியோக்களில் உள்ளது நீங்கள் கவனித்திருப்பீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் விளம்பரம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. யூடியூப்பை பொறுத்த வரை வீடியோக்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக விளம்பரங்களை பார்க்க வேண்டும்., இதுதான் யூ டியூப்பில் இருக்கும் ஒரு வழி. இந்த விளம்பரங்கள் இல்லாமல் அனைத்து வீடியோக்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், ப்ரீமியம் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

மாதம் 129 ரூபாய் செலுத்தி எந்த விளம்பரமும் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம். டேட்டாவை வீணாக்காத விரும்பாதவர்கள் 129 ரூபாய் ப்ரீமியம் கட்டணம் செலுத்தி விளம்பரம் இல்லாத வீடியோக்களை பாருங்கள். அதேநேரத்தில் பணம் செலுத்தாமல், டேட்டா வீணாகமல் விளம்பரம் இல்லாத வீடியோவை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு டிரிக் உள்ளது. மொபைல் அல்லது பர்சனல் கம்யூட்டரில் ஆட் பிளாக்கர் பயன்படுத்தினால் விளம்பரம் இல்லாத வீடியோவை பார்க்கலாம். அதாவது, Adblock For YouTube என்பதை பயன்படுத்துங்கள். 

மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவச Adblocker Browser: Adblock & Private Browser-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த செயலி உங்களை யூ டியூப் விளம்பரத்தை பார்ப்பதில் இருந்து தப்பிக்க வைக்கிறது. இந்த செயலி மூலம் யூ டியூப் வீடியோக்களை விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம்

மேலும் படிக்க | 365 தொல்லைக் கொடுக்காத BSNL-ன் சிறந்த ரீச்சார்ஜ் பிளான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News