வீடியோ உருவாக்கும் மற்றும் பகிர்வு பயன்பாடான டிக்டாக்., கூகிள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கங்களைப் பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஹலோ மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சிறந்த சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

The Sensor Tower Report 2019-ன் படி டிக்டாக் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட சமூக ஊடக பயன்பாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2019-ல் 60 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றதன் மூலம் டிக்டாக் இந்த சாதனையினை படைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இதன் பதிவிறக்கம், அதன் மொத்த பதிவிறக்கங்களில் 44% உள்ளது என்று அதிகாரப்பூர்வ வலைப்பதிவு குறிப்புகள் தெரிவிக்கின்றன.


இந்த பட்டியலில் பேஸ்புக் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மொத்த பதிவிறக்கத்தில் இந்தியாவிலிருந்து 23% பதிவிறக்கம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த பதிவிறக்கங்களின் அடிப்படையில் Instagram, Likee, Snapchat ஆகியவை முதல் ஐந்து பயன்பாடுகளில் இடம்பிடித்துள்ளன.


இந்தியாவில் தடை விதிக்கப்பட வேண்டும் என பலராலும் நிர்பந்திக்கப்பட்டு வரும் பயன்பாடு டிக்டாக். இச்செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் தரவு சேமிப்பு மையத்தை இந்தியாவில் நிறுவ உள்ளதாக டிக் டாக் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.


குழந்தைகள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்திவருகின்றனர். திரைப்பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை அனைவரும் இந்த டிக்டாக் செயலியில் மூழ்கி உள்ளனர். இக்காலத்தின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ள டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்பட்டு, சீன நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி டிக்டாக் செயலி உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக கருதப்படுகிறது.