Credit card: இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் சம்பாத்தியத்தை விட கிரெடிட் கார்டுகளையே அதிகம் சார்ந்து இருக்கின்றனர். சிலருக்கு இது உபயோகமாக இருந்தாலும், பலருக்கும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. கத்தியைபோன்றது கிரெடிட் கார்டு பயன்படுத்துவது. நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் கையை அறுத்துவிடும். கிரெடிட் கார்டு பணம் கட்டவில்லை என்றால், வங்கி ஊழியர்கள் உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். அதனால், அத்தகைய தொல்லையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால், இங்கு இருக்கும் வழிமுறையை சரியாக பின்பற்றுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கியுடன் உரையாடல்


கிரெடிட் கார்டு பில் கட்டமுடியாமல் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் வங்கியுடன் பேசுவதுதான். மொபைலை ஆஃப் செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக உங்களுக்கு நிதிப் பற்றாக்குறை இருப்பதாக வங்கியிடம் பேசுங்கள். அத்தகைய சூழ்நிலையில், மோசமான விஷயங்களைச் சரிசெய்ய வங்கி உங்களுக்கு சிறிது நேரம் கொடுக்கலாம்.


மேலும் படிக்க | Credit Card: கிரெடிட் கார்டை பற்றி கவலைபட வேண்டாம்; உங்களுக்கான 4 டிப்ஸ்


குறைந்தபட்ச தொகை


எப்போது கிரெடிட் கார்டு பில் வந்தாலும் அதில் இரண்டு வகையான தொகைகள் இருக்கும். முதலாவது செலவழித்த மொத்தத் தொகை மற்றும் இரண்டாவது குறைந்தபட்சத் தொகை. அதாவது மொத்தச் செலவுகளை நீங்கள் செலுத்த விரும்பவில்லை என்றால், பில்லின் கடைசித் தேதி வரை குறைந்தபட்சத் தொகையை செலுத்தலாம். இதன் பொருள் உங்கள் பில்லில் கூடுதல் கட்டணம் இல்லை. அதே நேரத்தில், வங்கியாளர்கள் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதில்லை, மேலும் CIBIL ஸ்கோரும் மோசமாக பாதிக்கப்படாது.


PF உதவியைப் பெறலாம்


PF பணம் உங்கள் எதிர்காலத்திற்கானது என்றாலும், நீங்கள் விரும்பினால், உங்கள் தேவைக்கேற்ப இங்கிருந்து பணத்தை எடுக்கலாம். வேலையின் போது, ​​முன்பணம் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொண்டு கிரெடிட் கார்டு பில் செலுத்தலாம். இதுதவிர, வீட்டில் ஏதேனும் பிற வருமானம் இருந்தால்கூட கிரெடிட் கார்டு பாக்கியை உடனே செலுத்திவிடு முற்படுங்கள். 


மேலும் படிக்க | பணக்காரர்களை குறிவைத்து கிரெடிட் கார்டில் புதிய மோசடி - உஷார் மக்களே..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ