மின் இணைப்புக்கு ஆதார் நகல் அவசியமில்லை
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
TNEB- Aadhar Link: ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, ஆதார் நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறையில், ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இலவச மின்சாரம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது சரியான பயனாளிகளுக்கு செல்கிறதா? என்பதை அடையாளம் காண தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து ஒருகிறது. அதன் ஒருபகுதியாக ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்குமாறு மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் அரசு சார்பில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | பிளிப்கார்ட், அமேசானை பின்னுக்குத் தள்ளிய ஷாப்பிங் வெப்சைட்: அசத்தல் விலை, தரம்
ஆன்லைனிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம். அதற்கு மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும். அடுத்து தொலைப் பேசி எண் பதிவிட்டப் பின் OTP வரும், அதை பதிவிட வேண்டும். பின்னர், திரையில் வரும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசியாக உங்கள் ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் குறிப்பிட வேண்டும். இதன் பின் உங்கள் தொலைப்பேசி எண்ணுக்கு மீண்டும் ஒரு OTP அனுப்பப்படும். அதை மட்டும் குறிப்பிட்டு சப்மிட் கொடுத்தால் போதும். இந்த நடைமுறையில் முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் பயனர்கள் புகார், சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தப் பின் மின்வாரியம் இந்த நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ