பிளிப்கார்ட், அமேசானை பின்னுக்குத் தள்ளிய ஷாப்பிங் வெப்சைட்: அசத்தல் விலை, தரம்

Online Shopping: ஆன்லைன் விற்பனைத் தளங்கள் மூலம் நாம் அலையாமல் ஷாப்பிங் செய்ய முடியும் என்பதைத் தவிர, இவற்றில் ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2022, 11:04 AM IST
  • வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் ஷாப்பிங் செய்யும் இணையதளத்தைத் தேடினால், இந்த பட்டியலில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் பெயர்கள் முதலில் வரும்.
  • ஆன்லைன் ஷாப்பிங் சந்தையில் இந்த இரண்டு வலைத்தளங்களின் விலைக்கு பாதி விலையில் கூட பொருட்களை விற்கும் வலைத்தளம் உள்ளது.
  • இந்த வலைத்தளம் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது.
பிளிப்கார்ட், அமேசானை பின்னுக்குத் தள்ளிய ஷாப்பிங் வெப்சைட்: அசத்தல் விலை, தரம்

ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம்: தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பல வித முன்னேற்றங்கள் நமது வாழ்வின் பல அம்சஙக்ளை மாற்றியுள்ளன. அதில் நாம் ஷாப்பிங் செய்யும் முறையும் ஒன்றாகும். முன்பெல்லாம் பல கடைகளுக்கு சென்று, அலைந்து, பல வகையான பொருட்களை பார்த்து, நம் நேரத்தை செலவு செய்து ஷாப்பிங் செய்து வந்தோம். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங் என்ற ஒன்று வந்தவுடன், இவை எதுவுமே தேவை இல்லை என்றாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்தே பல வித பொருட்களை பார்த்து, அதில் நமக்கு வேண்டியவற்றை நம்மால் வாங்க முடிகின்றது.

எனினும், இன்றும், கடைகளுக்கு சென்று, ஆடைகள், பொருட்கள் என அவற்றை தொட்டுப்பார்த்து, தரம் பார்த்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நேரமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும், வெளியில் செல்ல இயலாதவர்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. ஆன்லைன் விற்பனைத் தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை அளிக்கின்றன. இவற்றின் மூலம் நாம் அலையாமல் ஷாப்பிங் செய்ய முடியும் என்பதைத் தவிர, இவற்றில் ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன. 

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான சந்தையில் இணையதளங்களுக்கு பஞ்சமில்லை. நீங்கள் ஆன்லனில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று தேடத் தொடங்கினால் போதும், உங்களுக்கு ஏகப்பட வலைத்தளங்கள் காணக்கிடைக்கும். மிகவும் மலிவு விலையில் ஷாப்பிங் செய்யக்கூடிய இணையதளங்கள் சந்தையில் சற்று குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் ஷாப்பிங் செய்யும் இணையதளத்தைத் தேடினால், இந்த பட்டியலில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் பெயர்கள் முதலில் வரும். 

மேலும் படிக்க | இரண்டு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு! வந்தாச்சு புது அப்டேட்

எனினும், இந்த 2 இணையதளங்களில்தான் மலிவான பொருட்கள் கிடைக்கின்றன என்று நினைக்க வேண்டாம். ஆன்லைன் ஷாப்பிங் சந்தையில் இந்த இரண்டு வலைத்தளங்களின் விலைக்கு பாதி விலையில் கூட பொருட்களை விற்கும் வலைத்தளம் உள்ளது. இந்த வலைத்தளம் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. அதில் உள்ள பொருட்களின் தரம் மிகவும் நன்றாக இருப்பதோடு, விலைகளும் மிகக்குறைவாக இருக்கின்றன. 

இந்த இணையதளத்தின் பெயர் என்ன? 

அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் மீஷோவின் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். ஏனெனில் இது தற்போது மிகவும் பிரபலமான ஷாப்பிங் வலைத்தளமாக உள்ளது. இதில் உள்ள பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு மொத்த வியாபார மண்டியில் பொருட்களை வாங்குவது போன்ற உணர்வு ஏற்படும். 

மீஷோவில் உள்ள பொருட்களின் விலைகள் மிகவும் மலிவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் இதில் அதிக அலவில் ஷாப்பிங் செய்து வருகிறார்கள். இவ்வளவு குறைவான விலையில், இந்த இணையதளத்தால் எப்படி பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது என்று வியக்கும் வாடிக்கையாளர்கள் ஏராளம். ஆகையால், அதன் பின்னணியில் உள்ள காரணத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த இணையதளத்தில் எந்த பொருட்கள் விற்கப்பட்டாலும், அவை விற்பனையாளர்களால் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அவற்றின் விலை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் தரமும் சிறப்பாக உள்ளது. வேறு சில இணையதளங்களும் இதே தரத்தை வழங்கினாலும் அவற்றின் விலை சற்று அதிகமாக இருக்கின்றன. 

இதுவரை மீஷோவில் இருந்து ஷாப்பிங் செய்யாத வாடிக்கையாளர்கள் ஒருமுறை அதை செய்து பார்க்க வேண்டும். அதன் பின் மீண்டும் மீண்டும் மீஷோவிலேயே ஷாப்பிங் செய்யத் தோன்றும். மீஷோ இணையதளத்தில் ஸ்மார்ட்போன் ஆக்சஸரீஸ்கள் முதல் ஆடைகள், காலணிகள் மற்றும் கடிகாரங்கள் என பல வகையான பொருட்களை தரத்துடன், மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். 

மேலும் படிக்க | Vi Unlimited Recharge: அலைமோதும் வாடிக்கையாளர்கள், நீங்க வாங்கிட்டீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News