Facebook-ல் டோக்கியோ ஒலிம்பிக் பற்றிய சிறப்பு புதுப்பிப்புகள்: இந்தியாவில் கிடைக்குமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில், அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஒளிபரப்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளின் சிறப்பம்சங்கள் பகிரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: விளையாட்டு ஆர்வலர்களுக்கான அணுகலை அதிகரிக்க பேஸ்புக் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் (Tokyo Olympics 2020) ஃபேஸ்புக்கில் அதன் பயனர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளை உற்சாகப்படுத்த உதவும் வகையிலும், உள்ளடக்கத்தைக் கண்டறியவும், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இயங்குதளங்களில் புதிய அம்சங்களை வெளியிடுவதாக நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பயனர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு புதிய அனுபவத்தை பெறுவார்கள்.
இந்த நாடுகளின் பயனர்கள் பயனடைவார்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில், அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஒளிபரப்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம், டோக்கியோ 2020 ஒலிம்பிக் (Tokyo Olympics 2020) விளையாட்டுகளின் போது சிறப்பம்சங்கள், தடகள வீரர் வீராங்கனைகளின் ப்ரொஃபைல்கள் மற்றும் விளையாட்டு விவரங்களை ரசிகர்கள் அணுகலாம். இதில் அமெரிக்காவில் என்.பி.சி யுனிவர்சல், ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு யூரோஸ்போர்ட் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் பி.ஐ.என் ஆகியவை இருக்கும்.
ALSO READ: Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு
இந்தியா, ரஷ்யா, சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள ரசிகர்கள் டோக்கியோவிலிருந்து அன்றைய சிறப்பம்சங்களை அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் பேஸ்புக் பக்கத்தில் காணலாம் என்று நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஒலிம்பிக் செய்திகளை எவ்வாறு பெறுவது?
அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் சாட்போட் இப்போது வாட்ஸ்அப்பில் (Whatsapp) கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்போட் ஒலிம்பிக் அட்டவணைகள், உலகெங்கிலும் உள்ள விளையாட்டுகளின் உள்ளூர் ஒளிபரப்புகளுக்கான டியூன்-இன் தகவல்கள் மற்றும் சமீபத்திய செய்திகள் மற்றும் பதக்க நிலைகளைப் பகிர்ந்து கொள்ளும்.
சாட்போட்டில் அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்கள் மற்றும் பல்வேறு ஒலிம்பிக் நிகழ்வுகள் பற்றிய வினாடி வினாவும் இருக்கும். ரசிகர்கள் ஹேஸ்டாக் ஸ்ட்ராங் டீம் பிரச்சாரத்தின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ: POCO F3 GT இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை, பிற விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR