Excitel வழங்கும் பிரமாண்டமான திட்டங்கள்; தினறும் Jio-Airtel-BSNL
இன்று நாம் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் திட்டங்களை விட மிகவும் பின்தங்கிய ஒரு நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம்.
இன்றைய காலகட்டத்தில், அனைவருக்கும் தினம்தோறும் இணையம் தேவைப்படுகிறது, கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் வைஃபை அல்லது பிராட்பேண்ட் சேவைகளை வைத்திருக்க விரும்புகிறார்கள். நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் எக்சைடெல் ஆகியவற்றின் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.
எக்சைடெல் திட்டங்களின் விவரம்
எக்சைடெல் இன் சிறந்த திட்டம் ரூ 699 மற்றும் அதன் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூன்று மாத திட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 565 செலுத்த வேண்டும், நான்கு மாத திட்டத்தில் மாதம் ரூ. 508, ஆறு மாத திட்டத்தில் மாதம் ரூ. 490 செலுத்த வேண்டும். நீங்கள் ஒன்பது மாத திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.424 செலுத்த வேண்டும், நீங்கள் ஒரு வருட கால திட்டத்தை எடுத்துக் கொண்டால், மாதத்திற்கு ரூ.399 செலுத்த வேண்டும். இந்த திட்டங்களில், நீங்கள் 100Mbps வேகத்தில் அன்லிமிடேட் இணையத்தைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | BSNL தனது 4G சேவையை ‘இந்த’ நாளில் தொடங்கலாம்; கவலையில் Jio-Airtel
ஜியோ-பிஎஸ்என்எல்-ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள்
ஜியோவின் மாதாந்திர பிராட்பேண்ட் திட்டமும் ரூ.699 ஆகும். இதிலும் உங்களுக்கு 100எம்பிபிஎஸ் வேகத்தில் இணையம் வழங்கப்படும் மற்றும் அதன் வேலிடிட்டி 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் ஆகும். இந்த திட்டத்தில் 3,300ஜிபி டேட்டா வரம்பு உள்ளது.
பிஎஸ்என்எல் பல சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களையும் வழங்குகிறது, அதில் நீங்கள் 100எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பெறுவீர்கள். 1000ஜிபி வரம்பு கொண்ட திட்டத்தின் விலை ரூ.749 மற்றும் ரூ.799க்கு 3,300ஜிபி டேட்டாவை நீங்கள் வாங்கலாம். இந்த இரண்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.
ஏர்டெல்லின் 'ஸ்டாண்டர்ட்' பிராட்பேண்ட் திட்டம் மாதத்திற்கு ரூ.799க்கு வருகிறது, இதில் நீங்கள் தனியாக வரி செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில், நீங்கள் மாதத்திற்கு 3,300GB அல்லது 3.3TB இணையத்தைப் பெறுவீர்கள், அதன் வேகம் 100எம்பிபிஎஸ் ஆகும்.
இவை ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் எக்ஸிடெல் ஆகியவற்றின் பிராட்பேண்ட் திட்டங்களாகும், இதில் உங்களுக்கு 100எம்பிபிஎஸ் வேகத்தில் இணையம் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடேட் இணைய வசதி உங்களுக்கு வழங்கப்படுவதால் எக்சைடெல் இன் திட்டம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR