Questions You Should Never Ask Google : கூகுள் தேடுதளம், கண்டிப்பாக நாம் கேட்கும் அனைத்திற்கும் பதில் கொடுக்கும். சொல்லப்போனால், அன்ஹ்ட தேடுதளத்திற்கு தெரியாத விஷயமே இல்லை என்று கூறலாம். இருப்பினும், இதனிடம் கேட்கவே கூடாத கேள்வி என சில இருக்கின்றன. இவற்றை கேட்பதால் உங்களுக்கு ஆபத்து வரலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிப்பட்ட கேள்விகள்:


உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ குறைபாடு அல்லது ஏதேனும் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் அதை வைத்து கூகுளிடம் கேள்வி கேட்க கூடாது. காரணம், உங்களுக்கு வந்திருப்பது சாதாரண தலைவலி, காய்ச்சலாக இருந்தாலும், அதை கூகுள் விளாவாரியாக கூறுகிறேன் என்ற பெயரில், அந்த நோயை தீவிரமானதாக உங்களிடத்தில் காட்டி விடும். 


சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள்:


சட்டத்திற்கு புறம்பான கேள்விகளை எப்போதும் கூகுளிடம் கேட்கவே கூடாது. உதாரணத்திற்கு பணத்தை திருடுவது எப்படி, ஒருவரை ஏமாற்றுவது எப்படி, சட்டத்திற்கு புறம்பான செய்த தவறில் இருந்து தப்பிப்பது எப்படி போன்ற கேள்விகளை கேட்க கூடாது. இது, ஒன்று உங்களை சட்டத்திற்கு புறம்பான தேடுதளத்திற்கு அழைத்து செல்லும், அல்லது உங்களை ஜெயிலில் தள்ளும்.


வருங்காலம் குறித்த கேள்விகள்:


கூகுள் தேடுதளமும், நம்மை போல மனிதர்களால்தான் ஆப்பரேட் செய்யப்படுகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு அதனிடம் கேள்வி கேட்க வேண்டும். அதனிடம் சென்று, “வாழ்க்கையின் அர்த்தம் என்ன? எனது வருங்காலம் எப்படி இருக்கும்? எனது ஆயுள் எவ்வளவு?” போன்ற கேள்விகளை கேட்க கூடாது. இதற்கு கடந்த காலமும் நிகழ் காலமும் மட்டுமே தெரியுமே தவிர, வருங்காலம் குறித்து ஒன்றும் தெரியாது.


ஆபத்தான கேள்விகள்:


கடந்த சில ஆண்டுகளில், வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி, வீட்டிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்வது எப்படி என சிலர் பார்த்துவிட்டு அதை நடைமுறைப்படுத்தினர். ஆனால், இது உயிரிழப்புகளை காரணமாக மாறியது. இதனை, லைவ் உதாரணமாக பல செய்திகளில் பார்த்துவிட்டோம். எனவே, இது போன்ற விஷயங்களை பார்த்து வீட்டில் எதுவும் செய்ய வேண்டாம். 


தனிப்பட்ட விவரங்களை பகிர்தல்..


நாம், ஏதேனும் ஒரு விஷயத்தை யாரிடமாவது மெஸஜில் அல்லது வாய்வார்த்தையாக பேசியிருப்போம், அதை கூகுளில் தேடியிருப்போம். சில மணி நேரங்களிலேயே, நீங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள் மூலம் அதற்கான விளம்பரங்கள் கண்முன் வரும். உங்கள் போன் உங்களை ஒட்டு கேட்கிறது என்பதற்கும், உங்கள் விவரங்களை பிற தளங்களில் பகிர்கிறது என்பதற்கும் இதைவிட பெரிய உதாரணம் இருந்துவிட முடியாது. எனவே, உங்களது முழுப்பெயர், உங்கள் முகவரி, உங்கள் இருப்பிடம் ஆகியவற்றை அங்கீகரிக்கப்படாத தளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். 


நிபுணரின் கருத்து சார்ந்த கேள்வி:


ஒரு விஷயம், உங்களுக்கு முழுமையாக தெரிய வேண்டும் என்றால், அதனை அத்துறை சார்ந்த நிபுணரிடம் கேட்டால்தான் தெரியும். உதாரணத்திற்கு, நீங்கள் மன ரீதியாக பிரச்சனையுடன் இருக்கிறீர்கள் என்றாலோ, தொழிலில் ஏதேனும் அட்வைஸ் வேண்டும் என்றாலோ, கண்டிப்பாக அதை கூகுளிடம் கேட்க வேண்டாம்.


மேலும் படிக்க | கூகுள் மேப்ஸ்... ஒரு வழிகாட்டி மட்டுமல்ல... இந்த தகல்களையும் வழங்கும்


மேலும் படிக்க | கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள்... செப்டெம்பர் 1ம் தேதி முதல் புதிய விதிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ